நம்முடைய வீட்டை அழகாக கட்ட வேண்டும், வீட்டில் வாங்கி வைக்கும் பொருட்கள் லேட்டஸ்ட் டிரெண்டில் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கும். அதில் முக்கியமாக வீட்டின் தரைப்பகுதியை அழகாக காட்ட வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஏனெனில் வீட்டின் உள்ளே நுழைந்ததும் முதலில் பார்வை போவது அங்கே தான். கிரேனைட், டைல்ஸ் என்று போட்டு அலுத்து போனவர்கள் இப்போது புதிதாக சந்தையில் வந்திருக்கும் 3D ப்ளோரிங் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போது இதுபோன்ற 3D ப்ளோரிங் போடுவதில் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனெனில் இது வீட்டுக்கு பிரம்மாண்டமான மற்றும் ராயல் லுக்கை தருகிறது. 3D ப்ளோரிங்கிற்கு பெயர் போன இப்பாக்ஷி ப்ளோரிங்கை (Epoxy flooring) பற்றி தான் இன்று காண உள்ளோம்.
Epoxy என்பது பசை வகையையும், ரசாயனங்களையும் சேர்த்து கிடைக்கக்கூடிய கடினமான மற்றும் உறுதியான பொருளாகும். நம் வீட்டில் பயன்படுத்தும் பசை கடினமாகிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படிதான் இந்த Epoxy-யும். இதை 2mm குறைவாக போட்டால் இப்பாக்ஷி பெய்ன்ட்டிங் என்றும், அதுவே 2mm அதிகமாக இருந்தால் இப்பாக்ஷி கோட்டிங் அல்லது ப்ளோரிங் என்று சொல்கிறோம்.
இந்த இப்பாக்ஷியை கமெர்ஷியல் இண்டஸ்ட்ரிஸ்ஸில் (Commercial industries) பயன்படுத்தியது போக இப்போது சமீபமாக வீடுகளில் பயன்படுத்த முக்கிய காரணம் 3D ப்ளோர் பெயின்டிட்கேயாகும். கடல், பாலைவனம்,மேகம், விண்வெளி, புற்கள் போன்ற தோற்றம் தரும் தரைகளையும் இதன் மூலமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதை உருவாக்குவதற்கு முதலில் எந்த டிசைன் வேண்டுமோ அதை தரையிலே ஒட்டி அதன் மீது கண்ணாடி போல இருக்கும் இப்பாக்ஷி ரெசினை ஊற்றி தேவைப்பட்டால் வேக்ஸ் பாலிஸ் (Wax Polish) பண்ணினால் போதுமானது. இந்த இப்பாக்ஷி ப்ளோரிங்கை சிமெண்ட் தரை மீதும் போட்டுக்கொள்ள முடியும் அல்லது டைல்ஸ், மார்பல்ஸ் மீதும் போட்டுக்கொள்ள முடியும்.
இந்த தரையில் இருக்கும் நன்மைகள் என்று சொல்ல வேண்டும் என்றால், இதன் உறுதி தன்மையும், Water resistance ஆகியவை தான். எந்த ஒரு கடினமான பொருட்கள் மேலே விழுந்தாலும் டைல்ஸ், கிரானைட் போல உடையாது. Water resistance என்பதால் எந்த கரையையும் உறிஞ்சாது. இதனால் இதை பராமரிப்பது எளிது. இது வீடுகளில் குறைந்தது 10 வருடமாவது உழைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா காலத்துக்கு ஏற்ற மாதிரி கிருமிகளை சேரவிடாது.
அதனால், மருத்துவம் சம்மந்தமான இடங்களில் இந்த தரையை போடுவது சிறந்தது. டைல்ஸ் மாதிரி ஒரு கல் இன்னொரு கல்லோடு சேருவது போன்ற அமைப்பு எல்லாம் இந்த இப்பாக்ஷியில் இல்லாததால் 3D ப்ளோரிங்கை டைல்ஸை விட இப்பாக்ஷியில் போடுவது அதன் அழகை அதிகரிக்கும். அதனால் தான் ஹோட்டல், ஷோரூம் என்று அதிக மக்கள் கூடக்கூடிய இடங்களில் இந்த தரையை அலங்காரத்திற்காக போட ஆரமித்துவிட்டார்கள்.
வீட்டில் குளியலறை, வரவேற்பறை பார்ப்பதற்கு சாதாரணமாக வெறுமனே இருப்பதை விட இதுபோன்ற அலங்காரங்களை செய்யும் போது தத்ரூபமாக இருப்பது மட்டுமில்லாமல், நமக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.