பொரி விரைவில் நமுத்துப் போகாமல் சேமிக்கும் தந்திரங்கள்! 

Tricks to save puffed rice from going stale soon!
Tricks to save puffed rice from going stale soon!
Published on

பொரி வகைகள் நம் தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. திருவிழாக்கள், பண்டிகைகள், விருந்துகள் என எல்லா நிகழ்வுகளிலும் பொரி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், தயாரித்த சில நாட்களிலேயே பொரி நமுத்துப் போய்விடுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். இந்தப் பதிவில் பொரி விரைவில் நமுத்துப் போகாமல் நீண்ட நாள் சேமிக்கும் சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

பொரி நமுத்துப் போவதற்கான காரணங்கள்: 

பொரி நமத்துப் போவதற்கு முக்கிய காரணம் ஈரப்பதம்தான். காற்றில் உள்ள ஈரப்பதத்தை பொரி உறிஞ்சிக் கொண்டு மென்மையாக மாறிவிடும். அதேபோல, அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் பொரியை வைத்தாலும் விரைவில் கெட்டுப்போகும். காற்று பொரியில் உள்ள எண்ணெயை ஆக்சிலைட் செய்து அதன் சுவையை கெடுத்துவிடும். மேலும், பூச்சிகள் பொரியை சாப்பிடுவதாலும் நமுத்துப்போகும் வாய்ப்புள்ளது.  

பொரியை சேமிப்பதற்கான முறைகள்: 

பொறனரியை நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால், அதை ஃபிரிட்ஜில் வைக்கலாம். பொரியை காற்று புக்காத பாத்திரத்தில் போட்டு, அதை நன்றாக மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அவ்வளவு எளிதில் நமுத்துப் போகாமல் அப்படியே இருக்கும். 

பொரியை உலர்ந்த குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். நேரடியாக அதன் மீது சூரிய ஒளி படுவதைத் தவிர்க்கவும். பொறியை காற்று போகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்தால் விரைவில் நமுத்துப் போகாமல் இருக்கும்.

பொரியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைக்காமல், மொத்தமாக அப்படியே வைத்தால் காற்று சுழற்சி குறைந்து பொரி நமுத்துப் போவது தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான உன்னியப்பம்-ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
Tricks to save puffed rice from going stale soon!

மிளகாய் பொடி ஒரு இயற்கையான பாதுகாப்பு பொருள். பொரியை சேமிக்கும் பாத்திரத்தில் சிறிதளவு மிளகாய் பொடியைத் தூவினால் பூச்சிகள் வராமல் இருக்கும். அதேபோல வேப்பிலையும் ஒரு சிறந்த இயற்கை பூச்சி விரட்டி. பொரியை வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு வேப்ப இலைகளை வைத்து மூடினால் பூச்சிகள் வராமல் பாதுகாக்கலாம்.

பொரியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்ச உப்பு பயன்படுத்தலாம். பொரியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு தூவி வைத்தால், எப்போதும் மொறுமொறுப்பாக விரைவில் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பொரியை நீண்ட நாட்கள் நமுத்துப் போகாமல் சுவையாக வைத்திருக்கலாம். இவற்றை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com