Kadamba wood bed
Kadamba wood bed

'உடம்பை முறித்து கடம்பில் போடு' - அப்படின்னா என்னங்கோ?

Published on

வீட்டில் இருக்கக்கூடிய அத்தியாவசிய பொருள்களில் கட்டிலும் ஒன்று. பொதுவாகவே தூங்குவதற்கு மரத்தால் ஆன பொருட்களை பயன்படுத்தும் போது அதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் அதிகம். 

பெரும்பாலும் கட்டில் செய்வதற்கு தேக்கு, வேம்பு, மா, பலா போன்ற மரங்களையே நாம் பயன்படுத்துவோம். அதை காட்டிலும் கட்டில் செய்வதற்கு உகந்ததாக கடம்பமரம் பார்க்கப்படுகிறது.

'உடம்பை முறித்து கடம்பில் போடு' என்று ஒரு பழமொழி உண்டு. கடம்ப மர கட்டிலில் தூங்கும் போது உடலில் உள்ள வலிகள் எல்லாம் குறைந்து, நிம்மதியான உறக்கத்தை தருகிறது. கடம்ப மரத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன.

அதனால்தான் முந்தைய  காலங்களில் வேலை செய்த அலுப்பு தீரவும், ஏதாவது காயங்கள் ஏற்படும் போதும் வலியை குறைப்பதற்கு பெரும்பாலும் கடம்ப மரக் கட்டிலையே பயன்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்களில் இருக்கக்கூடிய கடம்ப மரமானது அறுவை வேலைகள் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டை விற்க வேண்டுமா? 'ஹோம் ஸ்டேஜிங்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Kadamba wood bed

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எழுதுகோலான பென்சில்  கடம்பு மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. சீரான மேற்பரப்பை கொண்டிருப்பதாலும், துளையிட எளிதாக இருப்பதாலும் இம்மரம்  பயன்படுத்தப்படுகிறது 

முக்கிய வாசனை திரவியமான அத்தர் தயாரிப்பில் கடம்ப மரம் மூலப் பொருளாக பயன்படுகிறது .

ரத்தத்தில்  உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக் குழல் புற்றுநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் கடம்ப மரம் பயன்படுத்தப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com