குறைந்த செலவில் வீட்டை அழகாக்குவது எப்படி? பயன்படுத்திய மரச்சாமான்கள் வாங்குவதன் நன்மைகள்!

Used furniture
Used furniture
Published on

பயன்படுத்திய மரச்சாமான்கள் (Used furniture):

  • புதிய மரச்சாமான்களை வாங்குவதை விட பயன்படுத்திய மர சாமான்கள் விலை குறைவாக இருப்பதால் ஓரளவு பணத்தை சேமிக்க உதவுகிறது.

  • பயன்படுத்திய மற்றும் விண்டேஜ் மரச்சாமான்கள் தனித்துவமான பாணிகளையும், கவர்ச்சியையும் கொண்டுள்ளதால் அவை நம் வீட்டிற்கு நேர்த்தியை சேர்க்கும்.

  • புதிய மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைத்து, கழிவுகளை குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் உதவ முடியும்.

  • சில பழைய மரச்சாமான்கள் திடமரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். இவை புதிய மரச்சாமான்களை விட சிறந்த தரம் மற்றும் நீண்ட ஆயுளை கொண்டிருக்கலாம். முக்கியமாக பயன்படுத்திய பொருட்களை வாங்குவதன் மூலம் நிலப்பரப்பில் குவியும் கழிவுகளின் அளவைக் குறைத்து, கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்ய உதவலாம்.

பயன்படுத்திய மரச்சாமான்கள் (Used furniture) வாங்குவதற்கான குறிப்புகள்:

பயன்படுத்திய மரச்சாமான்களை வாங்கும் பொழுது அவற்றின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை பார்க்க வேண்டும். மரச்சாமான்களில் ஏதேனும் சேதங்கள் அல்லது குறைபாடுகள் உள்ளதா என்பதையும் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் மரச்சாமான்கள் நம் வீட்டிலுள்ள இடத்திற்கு சரியான வகையில் பொருந்துமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக வாங்க விரும்பும் பொருளின் சந்தை விலையை அறிந்து கொண்டு, அதற்கேற்றார் போல் நியாயமான விலைக்கு பேரம் பேசி வாங்கலாம்.

பயன்படுத்திய மரச்சாமான்களை வாங்கும் பொழுது தரத்தை சரி பார்ப்பதும், மறைக்கப்பட்ட சேதங்களை குறிப்பாக கீறல்கள், உடைந்த பாகங்கள் போன்ற குறைபாடுகளை கவனிப்பதும், சந்தை மதிப்பை அறிவதும் அவசியம்.

பயன்படுத்திய மரச்சாமான்களை எங்கே வாங்கலாம் மற்றும் விற்கலாம்:

Facebook Market place, OLX , Quikr, NoBrokerHood போன்ற தளங்கள் மற்றும் உள்ளூர் பயன்பாட்டு கடைகளில் தரமான, பயன்படுத்தப்பட்ட மரச்சாமான்களை வாங்கலாம், விற்கலாம்.

Dukaan: பயன்படுத்திய மரச்சாமான்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு ஏற்ற மற்றொரு சிறந்த இடமாகும்.

OLX மற்றும் Quikr: இந்திய அளவில் பிரபலமான இந்த தளங்களில் பயன்படுத்திய மரச்சாமான்களை பட்டியலிட்டு விற்க முடியும்.

Facebook Marketplace: வாங்கவும் விற்கவும் ஒரு எளிய மற்றும் வேகமான வழியாகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் கரையான் (Termite)களின் படையெடுப்பைத் தடுப்பது எப்படி?
Used furniture

ஆன்லைன் தளங்கள் மட்டுமின்றி பயன்படுத்திய மரச்சாமான் கடைகள், சமூக மறுவிற்பனை அங்காடிகள் போன்ற கடைகளையும் பயன்படுத்தலாம்.

நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிறந்த மரச்சாமான்கள் கடைகளை தேர்ந்தெடுப்பதோ அல்லது மலிவு விலையில் பயன்படுத்திய மரச்சாமான்களை விற்கும் சமூக மறுவிற்பனை அங்காடிகளையோ அணுகலாம். இவை நமக்குத் தேவையானவற்றை வாங்குவதற்வோ அல்லது விற்பதற்கோ சுலபமாக இருக்கும்.

பழைய பயன்படுத்திய மரச்சாமான்களை எவ்வாறு புதுப்பிப்பது?

பழைய மரச்சாமான்களை புதுப்பிக்க முதலில் அவற்றை நன்றாக சுத்தம் செய்து தேய்மானங்கள், பழைய கறைகளை நீக்க வேண்டும். பழுதான பகுதிகளை சரி செய்ய வேண்டும். தளர்வான பகுதிகள் மற்றும் சிறிய விரிசல்களை நிரப்ப மர பசையை பயன்படுத்தி சரி செய்யவும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Used furniture

பின்பு பழைய பூச்சுகளை அகற்றி மரத்தின் இயற்கையான அழகை வெளிக் கொணரவும். பிறகு மரத்தின் வகையைப் பொறுத்து நமக்கு விருப்பமான புதிய வர்ணம் பூசி புதிய தோற்றத்தைக் கொண்டு வரலாம். இறுதியாக புதிய கைப்பிடிகள் மற்றும் பிற வன்பொருள்களை பொருத்துவதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட மரச்சாமான்களை மீண்டும் அழகு பெறச் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com