
வீட்டை சுத்தப்படுத்த நாம் உபயோகிக்கும் பொருட்கள் கெமிகல் கலந்திருப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் வினிகரில் எந்த கெமிக்கலும் இல்லாததால் இதை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்யலாம். இதில் குறைந்த அளவே அமிலத்தன்மை உள்ளது
கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்கள்,
வெள்ளை வினீகரையும் தண்ணீரையும் கலந்து அதில் ஐசோப்ரொபைல் ஆல்கஹால் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களில் ஸ்ப்ரே செய்து நியூஸ் பேப்பரால் துடைக்கலாம். உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியையும் இதைக்கொண்டு பளிச்சென்று ஆக்கலாம்.
ஒரு மைக்ரோ வேவ் பௌலில் வினிகர் மற்றும் நீர் கலந்து 5 நிமிடம் மீடியம் மோடில் வைக்கவும். உள்ளே இருக்கும் தூள்கள் உலர்ந்து விழும். பிறகு ஈரத்துணியால் துடைத்து பேப்பர் டவலால் துடைக்கவும்.
உங்கள் வீட்டு குழந்தைகள் தவழும்போதும் மற்றும் செல்லப்பிராணிகள் உங்க தரையை துடைக்க கெமிகல் கலந்த லிக்விட் உமயோகித்தால் பிரச்னை ஏற்படும் ஆகவே ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் வினிகர் , லிக்விட் சோப் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உள்ள டீ ட்ரீ ஆயில் உபயோகிப்பது சிறந்தது. கறைகளும் நீங்கும்.
சமையல் மேடையை வினிகர் கொண்டு சுத்தம் செய்ய எண்ணைக் கறைகள் நீங்கும்.
உங்கள் சமயலறை சிங்கில் பேக்கிங் சோடா தூவுங்கள். பிறகு வினீகரைத் தெளியுங்கள். ஒரு ஸ்பான்ஜால் நன்றாக தேய்த்து பிறகு தண்ணீர் விட்டுக்கழுவி சுத்தம் செய்யுங்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் செராமிக் சிங்குகளை இப்படிக் கழுவி சுத்தம் செய்யலாம். பித்தளை அல்லது கல் சிங்குகளை அல்ல.
உங்கள் பாத்ரும் ஷவரையும் வினீகர் கொண்டு சுத்தமான செய்யலாம். பழைய டுத் பிரஷ் உபயோகிக்க நன்கு சுத்தமாகும்.
உங்கள் கெட்டில் மற்றும் கா ஃபி மேக்கரையும் வினீகரால் சுத்தம் செய்யலாம். வினீகர் தண்ணீரை கொதிக்கவைத்து பிறகு நன்றாக கழுவுங்கள்.
பாத்திரங்கள் கழுவும் டிஷ் வாஷரையும் வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம். டிஷ்வாஷர் பௌலில் வெள்ளை வினீகர் சேர்த்து empty load டில் சுடுநீர் சைக்கிளில் ஓடவிட்டு சுத்தம் செய்யலாம்.
வினிகர் கொண்டு உங்கள் பெட் ஷீட்டுகள் போன்றவைகளை சுத்தம் செய்யலாம் கலர் துணிகளுக்கு வேண்டாம் கலர் போய்விடும்.