வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

Vastu painting
Vastu paintinghttps://nilavinnizhal.blogspot.com

வாஸ்து சாஸ்திரத்தில் ஓவியங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஓவியங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. நதி பாய்வது அல்லது மீன் நீந்துவது போன்ற படங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடத்தில் வைக்க, வாழ்வில் மேன்மை உண்டாகும். இது போன்ற ஓவியங்களை பணம் வைக்கும் இடம் போன்ற  இடங்களில் வைத்தால் நிலையான செல்வம் இருக்கும்.

பறவைகள் பறப்பது போன்ற படங்களை வைப்பது செல்வத்தின் அளவை அதிகரிக்கும். வீட்டினுள் போதுமான சூரிய ஒளி இல்லையெனில் பிரகாசமான சூரியன் இருக்கும் படம் ஒன்றை வைத்தால் அது வீட்டிற்கு நேர்மறையான எண்ணங்களை அளிக்கும்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அறையிலும் மான் இருக்கும் ஓவியங்களை வைத்தால் அது ஆரோக்கியத்தின் அடையாளமாகும். பைன் மரங்கள் இருக்கும் ஓவியங்களை வீட்டில் மாட்டுவது , வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டும். வெள்ளை நிறப் பின்னணியில் இந்த மரங்கள் இருப்பது போன்ற ஓவியங்களை வைப்பது நல்லது.

நெருப்பு தொடர்பான ஓவியங்களை ஒருபோதும் வீட்டில் மாட்டக்கூடாது. தீமை, தனிமை, துக்கத்தை பிரதிபலிப்பது போன்ற ஓவியங்களை வீட்டில் எந்த அறையிலும் வைக்கக் கூடாது. இந்த ஓவியங்கள் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், ஆரோக்கிய பிரச்னைகளையும் தரும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் சாக்கரின் பயன்படுத்தலாமா?
Vastu painting

நமக்குப் பிடித்தமானவர்களின் படத்தை ஒருபோதும் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இது நல்லதல்ல. பறவைகளின் ஓவியங்களை வைக்கலாம். தனிமையாக இருக்கும் பறவை படம் மாட்டினால் சோக உணர்வைத் தந்து விடும்.

தெய்வம்  உள்ள படங்கள், குழந்தைகளின் சிரிப்பான ஓவியங்களை வீட்டில் மாட்டுவது புத்துணர்வை தரும். இயற்கைக் காட்சிகள் கொண்ட ஓவியங்கள் மன மகிழ்ச்சியைத் தரும்.

இவ்வாறு பல்வேறு ஓவியங்களை வீட்டில் மாட்டுவது வீட்டில் நல்ல எண்ண அலைகளை உருவாக்கி இல்லத்தை இனிமையாக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com