

நம் திருமணாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாஸ்து குறிப்புகள் சிலவற்றைப் பின்பற்றவேண்டும். வாஸ்து தோஷங்கள் இருந்தால் மகிழ்ச்சி ஏற்படாது. வாஸ்து பிரகாரம் சில விஷயங்களை நாம் பின்பற்ற நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் அந்த விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்
கணவன் மனைவி இடையே பகை இருந்தால் அதற்குக் காரணம் அவர்கள் தூங்கும் திசையாக இருக்கலாம் எனவே திருமண தம்பதிகள் தென்கிழக்கு திசை நோக்கிய அறையில் வசிக்கக் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். வாஸ்துப்படி இது திருமண உறவுக்கு தீங்கு விளைவிக்குமாம்.
படுக்கை அறை நன்கு வெளிச்சமாக இருக்கவேண்டும். சூரிய ஒளி படும்படி இருந்தால் மிக நல்லது. மேலும் படுக்கை அறைக்கு கருப்பு மற்றும் அடர் வண்ணங்கள் தீட்டுவதை தவிர்க்கவும்.வெளிர் நீலம்,நீலம், வெளிர் பச்சை நிறங்கள் மிகவும் பொருத்தமானவை.
உங்கள் வீட்டிற்குள் எந்தவிதமான இரைச்சல் சத்தமும் இருக்கக் கூடாது. இரைச்சலான வீடு எதிர்மறை ஆற்றல்களை அழைக்கின்றது. இது வீட்டினரிடையை ஒற்றுமையின்மை மை உருவாக்குகிறது. இதனால் கணவன் மனைவியிடையே சண்டை வரும்.
திருமண தம்பதிகள் ஒன்றாக அதிக நேரம் செலவழிக்க வேண்டும். உங்கள் அறையை இருட்டாக வைத்திருப்பதை தவிர்க்கவும். உங்கள் படுக்கையறையில் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்க தூபம் போடுவது சிறந்தது.
கணவன் மனைவி இடையை நல்ல திருமண உறவுக்கு கணவன் வலது பக்கமும் மனைவி இடது பக்கமும் படுக்க வேண்டும்.
குடும்பத்தில் யாரும் படுக்கையறையில் சாப்பிடக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அழைக்கும். டைனிங் டேபிளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது நல்லது. அப்படி சேர்ந்து சாப்பிடும்போது உறுப்பினர்களிடையே நல்ல நெருக்கம் உண்டாகுகிறது
வீட்டின் சுவர்களில் ஏதாவது விரிசல் ஏற்பட்டால் உடனே அதை சரிசெய்ய வேண்டும். சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் உடன்பிறப்புகள் இடையை தகவல் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
வீட்டில் நிறைய செடிகளை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகிறது. மேலும் அது கணவன் மனைவி உறவையும் குடும்ப உறவையும் அன்பாக வளர்க்க உதவுகிறது.
உங்கள் அறையில் கண்ணாடி இருந்தால் தூங்கும்போது கணவனும் மனைவியும் அதை பார்க்காத வகையில் வைக்கவும். நீங்கள் தூங்கும்போது கண்ணாடி நிலையை மாற்றுவது சாத்தியமில்லை என்றால் கண்ணாடியை தூங்கும்போது துணியால் மூடி வைக்கவும்.
கணவன் மனைவி புகைப்படத்தை தெற்கு பக்கம் வைக்க அது வடக்கு நோக்கி இருப்பது நல்லது. மனிதர்கள் படங்களை தெற்கு பக்கம் வைத்து தெய்வசக்தி உள்ள வடக்கு நோக்கி இருப்பது நல்லது மேற்கு சுவரில் சனி இருப்பதால் மேற்கு பக்கம் படம் வைக்கக்கூடாது.