வாஸ்துப்படி பணம் பெருக்கும் ரகசியம்: பணத் தட்டுப்பாடை தவிர்க்கும் முறைகள்!

பணம் பூஜை அறையில் அல்ல, தேக்கு மரப் பெட்டியில்; சிவப்பு துணி, நறுமணம், காற்றோட்டம் போன்ற வாஸ்து குறிப்புகள் மூலம் பணத் தட்டுப்பாடை தவிர்க்கும் முறைகள்.
vastu-tips-for-wealth
vastu-tips-for-wealth
Updated on

ணத்தை எப்போதும் மரப் பெட்டியில்தான் வைக்க வேண்டும்‌. எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் அதற்கு தேக்கு மரம் என்று பெயர் வந்தது.‌ அதன் உறுதியான நிலைத்த தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும். வாஸ்துப்படி பணம் பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை வரவு செலவு செய்யவேண்டும்? பணம் இன்றைக்கு பல பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தியாக இருந்து வருகிறது.‌ அத்தியாவசிய பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருட்கள் வரை வாங்கப் பணம் தேவையாக இருக்கிறது.

வாழ்க்கையில் அதனால் எல்லோருமாக பணத்தை நோக்கி ஓட வேண்டி இருக்கிறது. வாஸ்துவும், பணமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன.  வாஸ்துப்படி பணம் எப்போதும் ஒருவர் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குப் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.‌

கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும்‌ ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும்‌.காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  அதனால் ஜன்னல் நிறைந்திருப்பது நல்லது.

வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும், ஜன்னலும் எவ்வளவு முக்கியமோ  அந்த அளவிற்கு தென் மேற்கு திசை முக்கியமானது. இங்குதான் நாம் பணத்தை வைக்கவேண்டும்‌. பணத்தை எப்போதும் தேக்கு மரப்பெட்டியில் வைப்பது நல்லது. காரைக்குடியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தேக்குமரக் கதவு ஜன்னல்கள் ஆல் இழைக்கப்பட்டிருக்கும்‌ அவர்கள் பணத்தை மரத்தால் ஆன பெட்டியில்தான் வைப்பார்கள்.‌ பணத்தின் அருமையை உணர்ந்ததோடு தேக்கு பணத்தை தேக்கி வைக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்தவர்கள்‌.

பணம் எப்போது வந்தாலும் அதை பூஜை அறையிலேயே வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் பேர்களின் கைகளுக்குச் சென்று வந்திருக்கலாம்‌. பூஜை அறையை தெய்வத்தன்மையுடன் வைத்திருப்பதால் அதை பூஜை அறையில் வைக்கவேண்டாம். பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து போகும் சிட்டுக்குருவியைப்  போன்றது‌ அதை சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள்‌. நல்ல விஷயங்களுக்கும் தாராளமாக செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

இதையும் படியுங்கள்:
பணம் சம்பாதிக்கக் கற்றுத்தரும் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் மகிழ்ச்சியாக வாழக் கற்றுத் தருகிறோமா?
vastu-tips-for-wealth

அளவுக்குமீறி பணம் வந்தாலும் சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று பணத்தை இறுக்கி பிடித்து  வைத்திருந்தால் அதை ஒருநாளும் அவர்களால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய மகன் மகள்  பேரன்தான் செலவுசெய்வர். அதனால்தான் ஈயா பண்டம் தீயாய்க் கெடும் என்ற பழமொழி ஏற்பட்டது‌. உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத்துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது அது பலமடங்காகப் பெருகும்‌. பணத்தை எப்போதும் சில்லறையாக வைக்காதீர்கள்.  நோட்டாகவே வையுங்கள்.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்கள் பக்கமும் திறப்பு நம் பக்கமும்  இருக்கும்படி கொடுங்கள்‌. பணப்பெட்டியில் எப்போதும் நறுமணம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.‌ பச்சை கற்பூரம் ஒரு துண்டு போட்டு வையுங்கள். பணத்துக்கு நாம் அடிமை ஆகாமல் இருந்தால்  பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் இருக்கும். மேற்கூறியவற்றைக் கடைபிடித்தால் எப்பேதும் பணத் தட்டுப்பாடு இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com