

புல் இனத்தைச் சேர்ந்த மணற்பாங்கான, மற்றும் ஆற்றுப்படுகைகளில் சிறப்பாக வளரும் வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியையும் மன அமைதியையும் சரும பொலிவையும் தரக்கூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வெட்டிவேரில் இருந்து பாய், காலணி, தொப்பி போன்றவற்றை விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள். அதுபோலவே வெட்டிவேர் திரைசீலைகளும் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் வெட்டி வேர் திரை சீலைகளின் பயன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கிராமிய கோடைகால அலங்காரத் தோற்றம்
வெட்டிவேர் திரைசீலைகளினுடைய இயற்கையான அமைப்பு வீட்டிற்கு மண் சார்ந்த அழகை அளிக்கிறது. மேலும் அதிகப்படியான கோடை காலத்திலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு அலங்கார பொருளாகவும் இருவித நன்மைகளை வாரி வழங்குகிறது.
பால்கனிகள் மற்றும் ஜன்னல்களுக்கு பொருத்தமானது
வெட்டிவேர் திரைசீலைகளை வீட்டில் இருக்கும் ஜன்னல்கள், பால்கனிகள், மற்றும் கதவுகளுக்கு அருகில் தொங்க விடும்போது வெளியிலிருந்து அறைக்குள் வெப்பம் நுழைவது தடுக்கப்பட்டு வீடு ஏசி போன்ற உணர்வை அளிக்கிறது.
இயற்கையான கோடைகால குளிர்ச்சி யோசனைகள்
இயற்கையான நாணல், தர்ப்பைப் புல் போல வளரும் வெட்டிவேர்களில் இருந்து வெட்டிவேர் திரைச் சீலைகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் திரைசீலைகளில் தண்ணீரைத் தெளிக்கும்போது, காற்றை இயற்கையாகவே அவை குளிர்விப்பதோடு அந்த இடத்திற்குப் புத்துணர்ச்சியை வழங்கி கோடையிலும் கொண்டாட்டத்தை உண்டு பண்ணுகின்றன.
வெப்பக் காற்றை இயற்கையாகவே குளிர்விக்கிறது
வெட்டிவேர் திரைச்சீலைகளை தண்ணீரில் ஊறவைக்கும் பொழுது அவை ஜன்னல் மற்றும் பால்கனிகள் வழியாக குளிர் காற்றை உள்ளே செல்ல அனுமதிக்கிறது. இதனால் மின்சாரம் இல்லாமலேயே அறை வெப்பநிலை குறைந்து வீடு குளிர்ச்சியாக உள்ளது.
மண் சார்ந்த புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தைச் சேர்க்கவும்
இயற்கையாகவே வெட்டிவேர் ஈரமாக இருக்கும்போது நறுமணத்தை வெளியிடும் ஆற்றல் கொண்டது. அதனால் வெட்டிவேரில் இருந்து தயாரிக்கப்படும் திரைச்சீலைகள் எப்பொழுதும் வீட்டிற்குள் நறுமணத்தை தவள விடுவதால் புத்துணர்ச்சியும், அமைதியையும் அளிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிரூட்டும் விருப்பம்
வெட்டிவேர் திரைச்சீலைகள் மின்சாரத்தையோ, இரசாயனங்களையோ பயன்படுத்துவதில்லை என்பதால் கோடைக்கால குளிர்ச்சிக்கு நீடித்த மாற்றாக அவை திகழ்கின்றன.
மண்ணரிப்பை தடுக்க உதவும் வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் திரைசீலைகள் மின்சாரம் இல்லாமலேயே வீட்டை ஏசி போல கண்டிப்பாக மாற்றும் தன்மை கொண்டது.