Want your husband to listen to you? Just follow this!
Want your husband to listen to you? Just follow this!

கணவர் உங்க கண்ட்ரோல்ல இருக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Published on

திருமண வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றால் கணவன், மனைவி இடையிலான உரையாடல் சுமூகமானதாக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகச் சூழலில் பெண்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால், மனைவி சொல்வதை கணவர் செவி கொடுத்துக் கேட்பதில்லை.

சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு முறை மனைவியின் கருத்தில் கணவர் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார் என்றால் பரவாயில்லை. ஆனால், எப்போதுமே கணவர் உங்கள் பேச்சை கேட்பதில்லை என்றால் அது பிரச்னைக்குரிய விஷயம்தான். இத்தகைய சூழலில், கணவர் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈசிங்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.

சௌகரியமான சூழலை உருவாக்கவும்: கணவன், மனைவி இருவருமே அமைதியான சூழலில், சௌகரியமாக மனம் விட்டு பேசும்படியான இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும். உங்கள் பேச்சில் நேர்மையை வெளிப்படுத்துங்கள். உங்கள் கணவர் பிஸியாக இருக்கும் தருணத்தில் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதைத் தவிர்க்கவும். அருகாமையில் உள்ள பூங்கா, ஏரி போன்ற இடங்களுக்கு இருவரும் கூட்டாகச் சென்று, இயற்கையை ரசித்தபடி மனம் விட்டுப் பேசத் தொடங்கலாம்.

உன்னிப்பாக கவனிக்கவும்: ஒருவர் பேச்சை மற்றொருவர் செவி கொடுத்து உன்னிப்பாகக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனை கணவன், மனைவி இருவருக்குமே பொருந்தும். பொதுவாக, கணவருடன் பேசும்போது அவர் சொல்வதை கூர்ந்து கேளுங்கள். அவருடைய கண்களை பார்த்து பேசுங்கள். இவ்வாறு செய்கையில் உங்கள் பேச்சையும் அவர் கவனிக்கத் தொடங்குவார்.

நேர்மை அவசியம்: உங்கள் கணவரிடம் நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். இதைச் செய்யும் பட்சத்தில் அவரிடம் இருந்து அதே நடவடிக்கையை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதையும் மீறி உங்கள் கணவர் ஏமாற்றும் பட்சத்தில் மனம் விட்டு கேட்டு விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
கொடுத்து உதவுங்கள்; பண்பில் உயருங்கள்!
Want your husband to listen to you? Just follow this!

கருத்தொற்றுமை: நீங்கள் என்ன சொல்ல இருக்கிறீர்கள் என்பதை தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்லி முடிக்கவும். உங்கள் எண்ணங்களை தெளிவாக எடுத்துரைக்கவும். நீண்ட பேச்சு குழப்பத்தில் முடியலாம். சில சமயங்களில் கருத்து வேற்றுமை இருந்தால் விட்டுக்கொடுத்து செல்லலாம். உங்கள் பேச்சை கணவர் ஆமோதிக்கும் தருணங்களில், “நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இயற்கையாகவே நிச்சயிக்கப்பட்ட இணையர்தான்’’ என்றும், இன்னும் சில வார்த்தைகளைக் கூறியும் பாராட்டு தெரிவிக்க மறவாதீர்கள்.

தீர்மானம்: கணவரிடம் என்ன பேசப்போகிறோம், எதைப் பேசப்போகிறோம், அதை சுருக்கமாகப் பேசி முடிப்பது எப்படி என்பதை உங்கள் ஓய்வு நேரத்தில் யோசித்து தீர்மானம் செய்து கொள்ளலாம். உரையாடத் தொடங்கியவுடன் தேவையற்ற பேச்சுக்களில் கவனம் செலுத்தாமல், நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை கச்சிதமாக சொல்லி முடிக்கலாம்.

மேற்கண்டவற்றை பின்பற்றினாலே உங்கள் கணவர், உங்கள் பேச்சை தட்டாமல் கேட்பார் என்பதை நிச்சயமாக உணருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com