

தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள் வேலைக்கு சென்றுக் கொண்டே வீட்டையும் சமாளிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிக பெரிய பிரச்சனை என்னவென்றால், சமையல் செய்வது தான். அதற்காக காய்கறிகளை அந்தந்த நேரம் வெட்டுவது அதை விட கஷ்டம். அதற்காகவே காய்யகறிகளை(Vegetables) முன்பே வெட்டி பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் இன்று பல வீடுகளில் உள்ளது. இவ்வாறு செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னவென்பதை பற்றித் தான் இந்தப் பதிவில் விரிவாக காண உள்ளோம்.
1. காய்கறிகளை அறிந்து ரொம்ப நேரம் வெளியிலே வைக்கக்கூடாது. காற்றில் உள்ள பேக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அதில் படிந்து காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து முழுவதையும் அழித்துவிடும்.
2. அடுத்தநாள் வேலைக்கு செல்பவர்கள் சுலபமாக இருக்க காய்கறிகளை முந்தைய நாள் இரவே வெட்டி பிரிட்ஜில் வைக்கும் போது வெறுமனே காய்கறிகளை பிரிட்ஜில் வைக்காமல் கவர் போட்டு காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.
3. காய்கறிகளை முன்பே வெட்டி வைப்பதில் தவறில்லை என்றாலும், சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்காமல் பெரிய துண்டுகளாக வெட்டி வைப்பதால் பேக்டீரியா, வைரஸ் அதன் மீது சுலபமாக படிவதை தடுக்கலாம். எப்படியிருந்தாலும் நாம் சமைப்பதற்கு முன்பு காய்கறிகளை வெட்டி சமைப்பதே சிறந்தது.
4. காய்கறிகளை நறுக்கிவிட்டு பிறகு தண்ணீரில் அலசும் போது அதிலிருக்கும் சத்துக்கள் தண்ணீரிலே போய்விடும். அதனால் எப்போதுமே காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே நன்றாக கழுவிவிட வேண்டும். அதன் பிறகே நறுக்கத் தொடங்க வேண்டும்.
5. காய்கறிகளை சமைக்கும் போது அதிக தீயீல் வைத்து சமைத்தால் சுலபமாக அதிலிருக்கும் வைட்டமின் சத்துக்கள் எல்லாவற்றையும் கரைத்துவிடும். அதனால் காய்கறியை எப்போது சமைத்தாலும் கம்மியான தீயிலேயே சமைக்க வேண்டும்.
6. காய்கறிகளை அதிகமான தண்ணீர் ஊற்றி வேக வைக்கக்கூடாது. அவ்வாறு வேக வைத்தால் காய்கறிகளில் இருக்கும் சத்துக்களான வைட்டமின் ஏ, கே, சி, ஈ ஆகியவை நமக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, குறைவான தண்ணீர் ஊற்றியே காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
7. காய்கறிகளில் உள்ள மொத்த சத்துக்களும் நம் உடலுக்கு கிடைத்தால் தான் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருக்க முடியும். காய்கறிகளும், பழங்களும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தான் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து நோய்களை எதிர்த்து போராட முடியும். அடுத்தமுறை காய்கறிகளை வெட்டும் போது இந்த டிப்ஸ்களை செய்ய மறந்துவிடாதீகள்.