குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்றும் வழிகள்!

Ways to change stubbornness in children
Ways to change stubbornness in children
Published on

குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இந்த அவசர உலகில் பெற்றோர்களுக்கும் நேரமின்மை, பொறுமையின்மையால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தை உயர்த்த இருவருமே பணிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கான அன்பு, பாசம் சரிவர கிடைப்பதில்லை. இதைக் காரணமாக வைத்துக்கொண்டு பிள்ளைகளும் ஆசைப்படும் பொருளைக் கேட்ட உடனே கிடைக்க வேண்டுமென நினைக்கின்றனர்.

வளரும் பருவத்தில் அவர்களது பிடிவாத குணம் அதிகரித்து, பெற்றோரை மிரட்டுவது, எமோஷனலாக பேசி பணிய வைப்பது என பழகுகின்றனர். இதையெல்லாம் பெற்றோர் சிறுவயதிலேயே கண்டித்து அவர்களது தவறை புரிய வைக்க வேண்டும்.

‘பெற்றோரின் நிதி நிலைமை நன்றாக இருக்கிறது. கொடுத்தால் என்ன?’ என நினைக்கும் பிள்ளைகளிடம், வீட்டின் வரவு செலவு பற்றி சொல்ல வேண்டும். ஆடம்பர செலவை அனைவரும் குறைத்தால்தான் அவசியமான பொருளையோ, சொத்துகளையோ வாங்க முடியும் என புரிய வைக்க வேண்டும்.

சாப்பிட, பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளிடம் காரணம் என்ன என்று கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அன்பால் திருத்த முடியாதபோது பிள்ளைகளுக்கு பிடித்தவர்களையோ அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தகுந்த ஆலோசனை, தீர்வு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டை தாவரங்களால் அலங்கரிக்க வேண்டுமா? இந்த 4 விஷயங்களை அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Ways to change stubbornness in children

பிடிவாத குணம், சுயநலம், பிறரிடம் ஒன்றி பழகாத பிரச்னைகளை சரியான நபர் பேச, அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அடிப்பது, மிரட்டுவது, எமோஷனலாக பெற்றோர் பேசுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நல்ல நண்பர்கள், மகிழ்ச்சியான குடும்பம், தன்னம்பிக்கை வார்த்தைகளே அவர்களை நல்வழிப்படுத்தும்.

இணையவழி பயன்பாடு ஒலி, ஒளி ஊடகங்களில் நல்லதைப் பார்க்கப் பழக்குங்கள். தங்களைப் பற்றிய சுய மதிப்பீடு, தான் செய்வது சரியா என்பனவற்றை அவர்களையே எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோரும், சுற்றமும் வாழ்ந்துகாட்ட, பிள்ளைகள் தன்னாலேயே நல்ல குணநலன்களைக் கொண்டு வளர்வார்கள். ஈகோ பார்க்காமல் பிள்ளைகள் சொல்வதையும் கேளுங்கள்.

நாமும் பல விஷயங்களில் பிடிவாதமாக இல்லாமல் இருத்தலே பிள்ளைகளை வழிநடத்த சிறந்த வழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com