Ways to deal with problems
Ways to deal with problems

பிரச்னைகளை போகிற போக்கில் எளிதாக சமாளிப்பதற்கான வழிகள்!

Published on

பிரச்னையே இல்லாத மனிதர்கள் இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிரச்னை உண்டு. அந்தப் பிரச்னையை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில்தான் வேறுபடுகிறோம். சிக்கல்கள் அல்லது பிரச்னை வரும்போது எளிதாக கையாளும் வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

அமைதியாக இருப்பது: ஒரு பிரச்னை வரும்போது அதற்காக பெரிதாக ரியாக்ட் செய்யாமல், சூழ்நிலையை கையாளுவதற்கு நேரத்தை ஒதுக்கி, அமைதியாக இருப்பது யோசிப்பதற்கான அதிக நேரத்தை கொடுக்கிறது. அமைதியாக இருப்பதால் பயம் மற்றும் பதற்றம் மனதையும் மூளையும் ஆட்கொள்ள விடாமல் பார்த்துக் கொள்வதால் பிரச்னைக்கான தீர்வு கிடைக்கிறது.

பாசிட்டிவான அணுகுமுறை: பிரச்னை குறித்து யோசிப்பதற்கு பதிலாக இதற்கு சரியான தீர்வு குறித்து அதிகமாக யோசித்தால் பிரச்னையே காணாமல் போய்விடும். அத்துடன் இந்த பிரச்னை, நெடுங்காலம் நம்முடன் இருக்கப்போவதில்லை, இதுவும் கடந்துபோகும் என்பதை நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள வேண்டும்.

தைரியமாக இருப்பது: எந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதும், தைரியமாகவும் அது குறித்து அடக்கமாகவும் இருக்க வேண்டும். தைரியத்துடன் அடக்கமும் சேரும்போது, உங்களுக்கு பிரச்னைக்குரிய சூழலை எப்படி சரியாக கையாள வேண்டும் என்பது தெரியும்.

பிறரின் கண்ணோட்டங்களுக்கு செவிசாய்ப்பது: ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போது அது வெவ்வேறாகத் தோன்றும். எனவே, அந்தப் பிரச்னை குறித்து பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதையும், அந்த பிரச்னையால் யார் பாதிக்கப்படுகிறாரோ அவரது கண்ணோட்டத்தையும் கேட்க வேண்டும். இப்படி வெவ்வேறு நபர்களின் இடத்தில் இருந்து அந்தப் பிரச்னையை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களை நேசிக்கும் கடல் விலங்கு எது தெரியுமா?
Ways to deal with problems

நகைச்சுவை உணர்வு: நமக்கு ஒரு பிரச்னை நடந்து முடிந்து, அதிலிருந்து கடந்து வந்த பிறகு அது குறித்து நகைச்சுவை செய்வோம். அதுபோல, அந்தப் பிரச்னையை சமாளிக்கும்போதும் எப்போதும் இறுக்கமாக இல்லாமல், கொஞ்சம் லேசான நகைச்சுவையை தூவலாம். ஆனால், அவை ஓவராக இருக்கக் கூடாது.

ஒருங்கமைப்பு: எந்த விஷயமும், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்போது அது என்ன என்பது பிறருக்குப் புரியவும் புரியாது, அதிலிருந்து தீர்வும் கிடைக்காது. எனவே, ‘இதுதான் நடந்தது, இதுதான் பிரச்னை. இதற்கு என்ன தீர்வு தேடலாம்?’ என்பதை தீர்மானிக்க முதலில் கலைந்து கிடக்கும் அந்த பிரச்னையை ஒருங்கமைக்க வேண்டும். அந்தப் பிரச்னைக்குரிய சூழலில் முதலில் எதை செய்து முடிக்க வேண்டும், கடைசியில் எதை செய்து முடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவது: எல்லா பிரச்னைகளும் ஒரே மாதிரியாக இருந்து விடாது. எனவே, அந்த இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்றாற்போல நம்மை மாற்றிக் கொள்வதோடு, நாம் எடுக்கும் முடிவுகளையும் தீர்வுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com