டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

Children's digital use
Children's digital use
Published on

ன்றைய ஆன்லைன் அபாயங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக சில வழிமுறைகளை பெற்றோர் உருவாக்குவது மிகவும் அவசியம். இணைய பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் திரை நேரத்தின் தாக்கம் பற்றிய ஆலோசனைகளை குழந்தைகளுக்கு வழங்கி பாதுகாப்பான ஆன்லைன் சூழலை உருவாக்குவது பெற்றோரின் கடமையாகும்.

குழந்தைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் சூழல்களை பயன்படுத்துவதில் வழி காட்டுதல், கண்காணித்தல் மற்றும் ஆதரவளிக்கும் நடைமுறைகளை இன்று பெற்றோர் அவசியம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், உடல், மனநல ஆரோக்கியத்துடனும் குழந்தைகள் நேரம் செலவிட உதவ வேண்டும்.

பாதுகாப்பாக வழி நடத்தும் முறைகள்:

தெளிவான எல்லைகளை அமைக்கவும்: குழந்தைகளுக்கு தினமும் ஒரு குறிப்பிட்ட திரை நேரத்தை மட்டும் அனுமதிக்க வேண்டும். பள்ளி முடிந்து வந்ததும் எப்போதும் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு இருக்கும் பிள்ளைகளிடம் தெளிவாக ஒரு மணி நேரம் மட்டும் அல்லது அரை மணி நேரம் மட்டும்தான் உனக்கான திரை நேரம் என்று தெளிவாக சொல்வதும் அதை கடைப்பிடிப்பதும் அவசியம்.

ஆன்லைன் பாதுகாப்பு: பாதுகாப்பான இணைய தளங்களை பார்வையிட மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிரும்போது ஏற்படும் அபாயங்களை பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்.

குழந்தைகள் தங்கள் ஆன்லைன் அனுபவங்களை பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். அதில் ஏதாவது எதிர்மறையான தொடர்புகள் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கம் இருந்தால் அவற்றை பெற்றோர் தடுக்க வேண்டும்.

கண்காணித்தல்: பிள்ளைகளின் டிஜிட்டல் செயல்பாடுகள், அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், இணையதளங்கள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும், ஆரோக்கியமான இணைய தளங்களை மட்டும் பார்வையிட கற்றுத் தர வேண்டும்.

ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்: செல்போன் விளையாட்டுகள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது தவிர இன்னும் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்கள் உள்ளன என்று அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

வெளியில் சென்று விளையாடுவது, புத்தகம் வாசிப்பது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, குழுவாக விளையாடுவது போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

டிஜிட்டல் தடம் பற்றி விவாதிக்கவும்: டிஜிட்டல் தடம் பற்றிய கருத்துக்கள், ஆன்லைன் செயல்கள் எவ்வாறு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய விளக்கங்களைத் தர வேண்டும் குழந்தைகள் ஆன்லைனில் கமெண்ட் செய்வது, பகிர்ந்து கொள்வது போன்றவற்றை கவனமாக செய்ய அறிவுறுத்த வேண்டும்.

ஆன்லைன் அபாயங்கள்: ஆன்லைன் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதன் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இணைய அச்சுறுத்தல்கள், பொருத்தமற்ற உள்ளடக்கம் போன்ற ஆன்லைன் அச்சுறுத்தல்கள் குறித்தும், எப்போதும் இணைய வழியில் நேர்மறையான முறையில் செயல்படுவது குறித்தும் சொல்லித் தர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தொடர் தும்மல் அவஸ்தையைப் போக்க உதவும் மூலிகை டீ!
Children's digital use

பொருத்தமான உள்ளடக்கம்: பயன்பாடுகள், கேம்ஸ்கள் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கத்தை தேர்ந்தெடுப்பதில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். வயதுக்கு ஏற்ற மற்றும் கல்வி சம்பந்தமான இணைய தளங்களை பார்வையிடுவதன் முக்கியத்துவத்தை பற்றி விவாதிக்க வேண்டும். குழந்தைகள் ஆன்லைனில் நேரத்தை செலவிடும்போது உடனிருந்து உதவ வேண்டும்.

பெற்றோர் அப்டேட்டாக இருத்தல்: பெற்றோர் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எந்த மாதிரியான இணைய தளத்தை பார்வையிடுகிறார்கள் என்பதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவும், சமூக ஊடகங்களின் சமீபத்திய போக்குகளைத் தொடர்ந்து தெரிந்து கொண்டு அப்டேட்டாக இருப்பது மிகவும் அவசியம்.

இந்த நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உலகத்துடன் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவலாம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com