இந்தியாவில் கல்வி என்பது ஒரு குழந்தையின் மிக முக்கிய பாதையாகும். ஆனால், அதிகரித்து வரும் கல்வி செலவுகள் பல பெற்றோருக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக, சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டுவது பெரிய சவாலாகவே உள்ளது. இந்தப் பதிவில் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பணத்தை சேமிப்பதற்கான யுத்திகள் பற்றி பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரி அல்லது பிற உயர் கல்வி சார்ந்த செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வி கட்டணம், தங்குமிடம், உணவு, புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் செலவுகள் போன்றவை பெற்றோருக்கு பெரிய சுமையாக உள்ளது. எனவே குழந்தைகள் பிறந்தது முதலே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பணத்தை சேமிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சேமிப்பு திட்டங்கள்: கல்விக்கான பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவை குழந்தைகளின் கல்வி நிதிக்கு பணத்தை சேமிக்க உதவும். இதில், பொது சேமிப்பு திட்டங்கள், குழந்தைகள் சேமிப்பு திட்டங்கள் மற்றும் வரிச்சலுகை அளிக்கும் சேமிப்புத் திட்டங்கள் போன்றவை அடங்கும்.
பங்குகள் மற்றும் பத்திரங்கள்: பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் உங்கள் பணத்தை வளர்க்க உதவும் சிறந்த வழியாகும். இருப்பினும் பங்குச்சந்தை அபாயகரமானது என்பதை நினைவில் கொண்டு, அதில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு நிதி ஆலோசகரிடம் பேசுவது நல்லது.
தங்கம் மற்றும் வெள்ளி: தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் நீண்ட காலத்தில் அதிக மதிப்பை அளிக்கும் முதலீடாக கருதப்படுகின்றன. உங்கள் குழந்தைகளின் கல்வி நிதி திரட்ட இவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வரலாம்.
அசையா சொத்து: நிலம் அல்லது வீடு போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதால் நீண்ட காலத்தில் உங்களது பணத்தை பெருக்க முடியும். இருப்பினும் உடனடியாக இதை பணமாக மாற்ற முடியாது என்பதால், உங்களுக்கு எது சரியானது என்பதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளின் கல்விக்கான பணத்தை சேமித்து வந்தால், எதிர்காலத்தில் இது பெரிதளவில் உதவும். எனவே, குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களது எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். பெற்றோர்கள் இதை கருத்தில் கொண்டு, உடனடியாக தங்களது சேமிப்பு மற்றும் முதலீட்டை தொடங்க வேண்டும்.