வீட்டில் உள்ள பல்லிகளை ரன்னிங் ரேஸ் ஓட வைக்க சில டிப்ஸ்! 

lizards
What are the ways to repel lizards in the house?
Published on

வீட்டில் அதிகபடியாக பல்லிகள் தென்படுவது பலருக்கு பிடிப்பதில்லை. அவை நம்மை பயமுறுத்துவதோடு, அசுத்தமான சூழலை உருவாக்குகின்றன என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால், பல்லிகள் நம் வீட்டில் உள்ள பூச்சிகளை உண்ணும் என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் உயிரினங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இருப்பினும், நம் வீட்டில் அவற்றைப் பார்க்க விரும்பவில்லை என்றால், சில இயற்கை வழிகளைப் பின்பற்றி பல்லிகளை மொத்தமாக விரட்ட முடியும். 

பல்லிகள் பொதுவாக உணவு, நீர், மற்றும் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடங்களைத் தேடி வீட்டுக்குள் நுழைகின்றன. நம் வீட்டில் சிதறிக் கிடக்கும் உணவுத்துகல்கள், தண்ணீர் துளிகள், இருண்ட ஈரமான வசிப்பிடங்கள் இவற்றை அதிகமாக ஈர்க்கின்றன. 

பல்லிகளை விரட்டும் வழிமுறைகள்: 

பல்லிகள் வீட்டுக்குள் வராமல் இருக்க வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக, சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவுத் துகள்கள் அங்கும் இங்கும் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குப்பைத் தொட்டிகளை அவ்வப்போது காலி செய்து மூடி வைக்கவும். 

பல்லிகளுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். எனவே, வீட்டில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்க அனுமதிக்காதீர்கள். குழாய்களில் கசிவு இருந்தால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். 

பல்லிகள் இருண்ட இடங்களில் வசிக்க விரும்பும். எனவே, வீட்டில் மூலைகள், அலமாரிகள் போன்ற இருண்ட இடங்களை வெளிச்சமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் LED விளக்குகளைப் பயன்படுத்தலாம். 

பல்லிகளுக்கு மசாலா பொருட்களின் வாசனை பிடிக்காது. மிளகாய் தூள், கற்பூரம், வெங்காயம், பூண்டு போன்றவற்றை வீட்டின் மூலைகளில் வைப்பதன் மூலம் அவற்றை வீட்டை விட்டு விரட்ட முடியும். இந்தப் பொருட்களை சிறிய துணியில் கட்டி ஆங்காங்கே தொங்கவிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் பல்லி சத்தம் எழுப்புவதால் என்னென்ன பலன்கள் என்று தெரியுமா?
lizards

பல்லிகள் எண்ணெயின் வாசனையை வெறுக்கக் கூடியவை. எனவே, எலுமிச்சை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் தெளிப்பது மூலம், பல்லிகளை உங்கள் வீட்டை விட்டு ரன்னிங் ரேஸ் ஓட வைக்கலாம். மேலும், சந்தையில் பல வகையான இயற்கை விரட்டிகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்துவது நல்ல பலன் கொடுக்கும். 

மேற்கண்ட வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வீட்டை பல்லிகளிடமிருந்து பாதுகாக்க முடியும். இந்த இயற்கை வழிகள் பாதுகாப்பானவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இவை நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com