முதுமையை தள்ளிப்போட என்ன செய்யலாம்?

What can be done to delay aging?
What can be done to delay aging?

முதுமையை தள்ளிப்போடவும், இளமையை தக்கவைக்கவும் சில விஷயங்களை கடைப்பிடித்தால் போதும். இளமை என்பது உடலளவிலா? அல்லது மனதளவிலா? என்பது முக்கியம். உடல் அளவில் அதிக வருடங்கள் இளமையாக வாழ முடியாது. குழந்தை பருவம், இளமை, முதுமை பருவம் என இயற்கையின் நியதியில்தான் வாழ முடியும். ஆனால், முதுமையை தள்ளிப்போட சிலவற்றை பின்பற்றி நல்ல பலன்களைப் பெறலாம்.

1. மனதை இளமையாக வைக்க நம்மால் முடியும். ஏனெனில், அதை வழிநடத்திச் செல்வது நாம்தான். நம் செயல்கள்தான் நம் வயதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. நம் எண்ணங்கள் இளமையாக இருந்தால் நம் செயலும் அப்படியே இருக்கும்.

2. மனதுக்குப் பிடித்த விஷயங்களை உற்சாகத்துடன் செய்ய மனம், உடல் இரண்டும் இளமையோடு இருக்கும். உடல் நலத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவு மன நலத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

3. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள, மகிழ்ச்சி தானாக வரும்.

4. எப்போதும் உடலாலும், மனதாலும் பிசியாக இருப்பது மனதையும் உடலையும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும். ஏதாவது ஒரு வேலையில் எப்பொழுதும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

5. காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டு எதிலும் மகிழ்ச்சியை பிரித்துப் பார்க்க தெரிந்துகொள்ள வேண்டும்.

6. நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் ஆக்கபூர்வமாக செயல்பட்டு மனதையும், உடலையும் இளமையாக வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்களை எப்படி சமாளிப்பது?
What can be done to delay aging?

7. மனதில் கவலைகளை பூட்டி வைப்பது, எதற்கெடுத்தாலும் சஞ்சலப்படுவது ஆகியவற்றை தவிர்த்து, மனம் விட்டு சிரிப்பது மிகவும் அவசியம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதை மறக்க வேண்டாம்.

8. நம்மை சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி / யோகா மிகவும் அவசியம்.

9. இயற்கையை ரசிப்பது: ‘இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு?’ என அலுத்துக் கொள்ளாமல் எவ்வளவு வேலை பளு இருந்தாலும் சின்ன சின்னதாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ரசிக்கக் கற்றுக் கொள்வதுடன், மாதம் ஒரு முறையாவது அருகில் உள்ள மலைப்பிரதேசங்களுக்கோ, இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்களுக்கோ சென்று வருவது நல்ல பலனளிக்கும்.

10. தியானம்: மனம் அமைதி பெற தியானம் உதவியாக இருக்கும். அதேபோல் நல்ல தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை இவையும் நம்மை இளமையாக இருக்க வைக்கும்.

11. முதுமையை தள்ளிப்போட நம் உணவில் பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகளும், கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, பழுப்பு அரிசி (Brown rice) போன்ற தானியங்களும், நார்ச்சத்து மிகுந்த உணவுகள், ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பருப்பு வகைகள், கீரைகள், காய்கள், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க பால் மற்றும் பால் பொருட்கள், வைட்டமின்களும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்த சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள நம்மை நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com