மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!

மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!

ழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலம் என்றாலே ஆடைகள் காய்வதில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆடைகளில் பூஞ்சை வருவது மன ரீதியாக பலரையும் பாதிக்கும். இது ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. இவ்வாறு உங்கள் துணிகளில் வெள்ளை நிற தூள் தோன்றினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாற வேண்டிய அவசியமில்லை. ஆகவே, இதுபோன்ற பூஞ்சை ஏற்பட்டால் எப்படி ஆடையை மீட்டெடுக்கலாம் மற்றும் இது எதனால் ஏற்படுகின்றது என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.

பருவ மழை தனியாக வருவதில்லை. அதனுடன் தொல்லை தரும் சிறிய பிரச்னைகளும் வருகின்றன. அவற்றில் ஒன்று ஆடைகளில் பூஞ்சை பிடிப்பது. மழைக்காலத்தில் வரும் பூஞ்சை உங்கள் ஆடைகள் அலமாரியில் பாதுகாப்பாக இருகின்றது என்று நினைக்க வேண்டாம். அடிக்கடி அதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பூஞ்சை கறுப்புப் புள்ளிகளுடன் கூடிய வெள்ளை நிற தூள் போன்று இருக்கும். ஈரமான ஆடைகளில் எளிதில் வளரக்கூடியது. குறிப்பாக, மழைக்காலத்தில் பூஞ்சை அதிகமாக வளர்ச்சியடையும். மழைக்காலத்தில் ​​காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். துவைத்த பிறகும் ஆடைகள் முழுவதுமாக வறண்டு போவதில்லை. ஆகவே, பூஞ்சை படராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.

* சூரியன் மறையும்போது உங்கள் ஆடைகள் மற்றும் காலணிகளை திறந்த வெளியில் வைக்கவும். இது அனைத்து ஈரப்பதத்தையும் அகற்றும்.

* வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கவும். இது வீட்டில் உள்ள துர்நாற்றத்தைக் குறைக்க உதவும்.

* சிலிக்கா ஜெல் பைகளை தங்கள் அலமாரிகளில் அல்லது துணிகளுக்கு இடையில் வைக்கவும். சிலிக்கா ஈரப்பதத்தை உறிஞ்சி, ஆடைகளில் பூஞ்சை வளர அனுமதிக்காது.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் பதற்றம்!
மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!

* உங்கள் துணிகளை வினிகரால் கழுவவும். முக்கால் கப் வெள்ளை வினிகரை சேர்த்து உங்கள் துணிகளை ஊற வைக்கவும். வினிகர் அச்சுத் திட்டுகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும்.

* எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட்டை உருவாக்கி, ஆடைகளில் பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்க்கவும். பின் கழுவி எடுத்தால் பூஞ்சைகள் விலகும்.

* வேம்பு தண்டுகளில் சிலவற்றை ஆடைகளில் இணைத்து வைத்தால் பூஞ்சை உங்கள் ஆடைகளில் இருந்து விலகி இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com