Generational Trauma என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, ஒரு குடும்பம், சமூகத்தின் பல தலைமுறைகளின் மனோபாவங்கள், நடத்தைகள் மற்றும் உடலால பிரச்சனைகள் வடிவில் தொடர்ந்து நீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நிகழ்வாகும். இது போர்கள், இனப்படுகொலைகள், இயற்கை பேரிடர்கள், சமூக அநீதிகள், தனிப்பட்ட துயரங்கள் போன்ற கடுமையான அனுபவங்களால் ஏற்படலாம். தலைமுறை காயம் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் வெளிப்படும். இது அவர்களின் உறவு வேலை போன்ற அனைத்தையும் பாதிக்கலாம்.
இது முதன் முதலில் இரண்டாம் உலகப் போரின்போது உயிர் பிழைத்தவர்களின் குழந்தைகளில் காணப்பட்ட மனோபாவ மாற்றம், நடத்தைகள் குறித்த ஆராய்ச்சியில், தலைமுறை காயம் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த ஆய்வு கடுமையான அனுபவங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு பரவுகின்றன என்பதைப் பற்றிய புதிய கேள்விகளை எழுப்பின.
தலைமுறை காயம் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. இவற்றில் மரபணு காரணிகள், சூழல் காரணிகள், உளவியல் காரணிகள் ஆகியவையும் அடங்கும். மரபணு காரணிகள் மோசமான அனுபவங்கள் ஒருவரின் மரபணுவை எவ்வாறு மாற்றி, அடுத்த தலைமுறைக்கு பரவுகின்றன என்பதை விளக்குகின்றது. சூழல் காரணிகள் குடும்பம், சமூகம், கலாச்சாரம் போன்ற காரணிகளை உள்ளடக்கியது. உளவியல் காரணிகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை விளக்குகின்றன.
தலைமுறை காயம் என்பது தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒருவரின் நடத்தை மாற்றம் உடல்நல பிரச்சனைகள் வடிவில் வெளிப்படலாம். மேலும், இது தனி நபர்களின் திறனை பாதித்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ விடாமல் தடுக்கும்.
தலைமுறை காயத்தில் இருந்து மீள்வதற்கு முதலில் அந்த காயத்தின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மனோ தத்துவ முறை, தியானம் போன்ற பல சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி பேசவும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.
எனவே, உங்களது தலைமுறையில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், அனுபவங்களின் அடிப்படையில் தற்போதைய தலைமுறையை வழிநடத்த முயற்சிக்காதீர்கள். இது உங்களின் அடுத்த தலைமுறையையும் மோசமாக பாதித்துவிடும். பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்து, அவர்களை மேம்பட்டவர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நீங்கள் சந்தித்த பிரச்சினைகளின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்து விடாதீர்கள்.