நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என்றால் என்ன?

நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என்றால் என்ன?

Published on

ண்மையிலேயே மனித மூளைக்கு, சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் புதிய அனுபவங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை நிறையவே இருக்கிறது. அதேபோல் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நல்ல உடற்பயிற்சி, சிறந்த உணவுமுறை, போதுமான உறக்கம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து, நம் மூளைக்கு பயிற்சி அளிக்கும்போது, அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படும் வகையில் அது கட்டமைக்கப்படுகிறது. 

நெகிழி ஒன்றை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை மெல்லிய தீயில் காட்டி, நன்றாக இழுங்கள். நீங்கள் இழுக்கும் திசைக்கு ஏற்ப நெகிழி நன்றாக வளைந்து கொடுக்கும். வெப்பத்தினால் அது வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறுகிறது.

இதை அப்படியே உங்கள் மூளையோடு ஒப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் மூளைக்கு கடினமான சூழல்களை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப அந்த கடினமான சூழலைக் கையாளும் தன்மையை உங்கள் மூளை பெற்றுவிடும். உங்கள் மூளையில் உள்ள சிக்னல்களைக் கடத்தும் "நியூரான்களுக்கு" நெகிழித் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதைத்தான் NEUROPLASTICITY என்கிறார்கள். 

எவர் ஒருவருக்கு இந்த Neuroplasticity தன்மை அதிகமாக இருக்கிறதோ, அவர் தைரியமாக எதையும் செய்யும் மனோபாவத்தைக் கொண்டிருப்பார். ஏனென்றால் அவர் எதையும் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையுடன் இருப்பார். முயற்சிப்பதற்கு முன்பாகவே பயந்து, அதனால் செயல்படாமல் இருக்கமாட்டார்.

இந்தத் தன்மையை ஒருவர் அடைய வேண்டுமானால், அவர்கள் பயந்து கொண்டிருக்கும் ஒரு செயலை தைரியமாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

1. ங்களுக்கு பிறரோடு பேச பயமாக இருந்தால், சிறுக சிறுக பேச முயற்சி செய்யுங்கள்.

2. ங்களுக்கு மக்களோடு பழக பயமாக இருந்தால், மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு அதிகம் செல்லுங்கள். இல்லையென்றால் தனியாக ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அவ்விடத்தில் வழி கேட்கவாவது, யாரிடமாவது நீங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பிறரோடு பேசிப் பழகுவீர்கள்.

3. மேடைப்பேச்சு பயமாக இருந்தால், நன்கு பயிற்சி பெற்று எப்படியாவது இரண்டு மூன்று முறை உளறினாலும் பரவாயில்லை என்று, முயற்சி செய்து முன்னேறுங்கள்.

இதுபோன்ற விஷயங்கள் உங்களுக்கு Real Life அனுபவத்தை ஏற்படுத்தும். நீங்கள் மூளைக்குள்ளேயே போட்டுக்கொண்டிருக்கும் கணக்குகளை விட, நிஜ வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களே சிறந்தது.

logo
Kalki Online
kalkionline.com