கல் உப்பு - பொடி உப்பு வித்தியாசம் என்ன?

Difference between rock salt and powdered salt
Difference between rock salt and powdered salt
Published on

ப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முன்பெல்லாம் கல் உப்புதான். ஆனால், இப்பொழுது கொடி உப்பு அதாவது டேபிள் சால்ட் என்று கூறப்படும் உப்பும் பயன்பாட்டில் பெருமளவில் உள்ளது. ரசாயனம் கலக்கப்பட்ட உப்பு என்றால் அது பொடி உப்புதான். நமது அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் இரு வகை உப்புகளான கல் உப்பு மற்றும் பொடி உப்பு ஆகியவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

முன்னர் கல் உப்பு கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இன்று தூத்துக்குடி போன்ற இடங்களில் இருக்கும் உப்பளங்களில் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரைப் பயன்படுத்தியே உப்பு தயாரிக்கப்படுகிறது.

கல் உப்பைப் பொறுத்தவரையில் அது உப்பு நீரை உப்பளங்களில் செலுத்தி ஆவியாக்கி, மீந்திருப்பதுதான் உப்பு. சந்தைக்கு அனுப்பப்பட வேண்டிய கல் உப்பில் அயோடின் சேர்ந்து அனுப்பப்படுகிறது.

இந்த அயோடின் இரு வழிகளில் சேர்க்கப்படுகிறது. ஒன்று, வயல்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தெளிப்பான்களில் மனித உதவியுடன் சேர்க்கப்படுகிறது. ஆனால், இதில் அயோடின் சமமாகக் கலக்காது  மற்றொரு முறையில், இயந்திரம் பயன்படுத்தி கல் உப்பில் அயோடின் சேர்க்கப்படுகிறது. இதில் அயோடின் உப்பு முழுவதும் சரிசமமாகச் சென்று சேர்கிறது.

டேபிள் சால்ட் அல்லது பொடி உப்பு தயாரிக்கப்படும் முறை எப்படி தெரியுமா? இதிலும் முதல் படியாக உப்பு நீர் உப்பளங்களில் செலுத்தப்பட்டு, முதலில் கல் உப்பு ஆக்கப்படுகிறது. பின்னர் அது ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதிலிருந்து மீண்டும் உப்பு நீரில் கழுவப்பட்டு, மண் தூசி ஆகியவை நீக்கப்படுகின்றன. பின்னர், அது உலர வைக்கப்பட்டு, அரைப்பான்களில் (crusher) செலுத்தப்பட்டுப் பொடியாக்கப்படுகின்றது. அதன்பின்னர் அதில் இயந்திர முறையில் அயோடின் சேர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் 5 வகை பானங்கள்!
Difference between rock salt and powdered salt

இதில் பொடி உப்பு கட்டிகளாகாமல் மணல் மணலாக இருக்கச் சிறிது சிலிகேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. உணவுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் உப்பில் கண்டிப்பாக அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி. அதை உறுதி செய்ய உப்பு ஆலைகளில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். அயோடின் சத்து குறைபாடை நீக்குவதற்காக அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com