இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

Indian Marriage
Indian Marriage
Published on

இந்திய திருமணங்கள் என்பது வெறும் இரண்டு நபர்கள் ஒன்றாக இணைவது மட்டுமல்ல. அது ஒரு கலாச்சார வெளிப்பாடு, சமூக நிகழ்வு, இரு குடும்பங்கள் ஒன்றிணையும் செயல்பாடு. இந்தியாவின் பன்முகத்தன்மை போலவே திருமணங்களும் பல்வேறு வடிவங்களில், சடங்குகளில் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பதிவில் இந்தியத் திருமணங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

இந்திய சமூகத்தில் திருமணம் என்பது வெறும் தனிப்பட்ட விஷயம் அல்ல. அது குடும்பம், குலம், சமூகம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. திருமணங்கள் மூலம் உறவுகள் வலுப்படுத்தப்பட்டு சமூக ஒருமைப்பாடு பேணப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், மதங்கள், சமூகங்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் திருமணங்களைக் கொண்டாடுகின்றன.‌ 

உதாரணமாக, வட இந்திய திருமணங்கள் அதன் ஆடம்பரம் மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு பெயர் பெற்றவை. தென்னிந்திய திருமணங்கள் பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சடங்குகளை மையமாகக் கொண்டவை. கிழக்கு இந்திய திருமணங்கள் அதன் எளிமை மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியத் திருமணங்கள் பெரும்பாலும் ஆன்மீக நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. பல திருமண சடங்குகள் வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருப்பதால் திருமண சடங்குகளும் மதத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்து திருமணங்கள், முஸ்லிம் திருமணங்கள், கிருத்துவ திருமணங்கள், சீக்கிய திருமணங்கள் போன்றவை தங்கள் தனித்துவமான சடங்குகளைக் கொண்டுள்ளன. இத்துடன் காலமாற்றத்திற்கு ஏற்ப திருமண பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. ஆடம்பரமான திருமணங்கள் குறைந்து எளிமையான திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் தங்களின் விருப்பப்படி திருமணங்களைத் திட்டமிட்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:
காற்றினிலே வரும் கீதம் - நாடக விமர்சனம்! நெகிழ்ச்சிக்கு இடையே பல நெருடல்கள்!
Indian Marriage

இது தவிர இந்திய திருமணங்களில் பல சவால்கள் உள்ளன.‌ மணமகன் மணமகள் வீட்டாரின் எதிர்பார்ப்பு, வரதட்சனை, கட்டாயத் திருமணங்கள் போன்றவை இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. எதிர்காலத்தில் இந்திய திருமணங்கள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. கால மாற்றத்திற்கு ஏற்ப திருமணங்கள் தொடர்ந்து மாறிவரும் என்பது உறுதி. நவீன காலத்தில் திருமணங்கள் மேலும் சமத்துவம், சுதந்திரம், தனிப்பட்ட விருப்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய திருமணங்கள் என்பது ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அது காலத்தால் மாறினாலும், அதன் அடிப்படை மதிப்புகள் எப்போதும் மாறாது. எதிர்காலத்தில் திருமணங்கள் தன்னை புதுப்பித்துக் கொண்டு புதிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருப்பது தொடரும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com