
வீட்டில் இருந்து வெளியூர்களுக்கு சென்றாலே நாம் ஹோட்டலில் அறை எடுத்து தங்குவது தான் வழக்கம். அவர் அவர்களின் வசதிக்கேற்ப ஏசி அறை, ஏசி அல்லாத அறை என எடுத்து கொள்வார்கள். அப்படி ஹோட்டல்களில் நீங்கள் ரூம் எடுத்திருக்கீர்கள் என்றால் அறைகளில் உள்ள பெட்ஷீட் வெள்ளை நிறங்களில் இருப்பதை கவனித்திருப்பீர்கள். படுக்கையில் பெட்ஷீட் மேலே ஒரு மெல்லிய துணி விரிக்கப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அது எதற்கு அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? இந்த பதிவில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹோட்டல்களில் வெள்ளை பெட்ஷீட் விரிக்கப்பட்டதற்கு காராணம், விருந்தினர்கள் வெள்ளை படுக்கை விரிப்புகளைப் பார்க்கும்போது, அறை முழுமையாக சுத்தமாக்கப்பட்டதாக நம்புகிறார்கள். இது ஹோட்டலுக்கு நம்பகமான சேவை பிம்பத்தை உருவாக்குகிறது.
அதே போன்று படுக்கையின் விளிம்பில் இந்த துணி (பெட் ரன்னர்) வைக்கப்படுவதற்கு முக்கியமான காரணம், மக்கள் தங்கள் பைகள், காலணிகள் அல்லது கோட்டுகளைப் படுக்கையின் அந்தப் பகுதியில் வைப்பது. இந்நிலையில், படுக்கை விரிப்புகள் அழுக்காகாமல் பாதுகாக்க இந்த துணி உதவுகிறது. ஹோட்டல்களில், இந்த துணி ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. வெளிப்புற துணிகளிலிருந்து வரும் தூசி மற்றும் அழுக்கிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
Homemaking.com இன் படி, "மக்கள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த உடனேயே தங்கள் பைகள், கோட்டுகள் அல்லது காலணிகளைப் படுக்கையின் விளிம்பில் வைப்பார்கள். இந்த துணி (பெட் ரன்னர்) சுத்தமான படுக்கை விரிப்புகளை அழுக்காகாமல் பாதுகாக்க உதவுகிறது."
இதனால், இந்த துணியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அறைக்குள் நுழைந்தவுடன் அகற்றுவது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் அழுக்கான பகுதிகள் படுக்கை விரிப்புகள், அலங்கார தலையணைகள் மற்றும் எறியும் போர்வைகள். இவை பெரும்பாலும் கழுவப்படாமல் இருக்கும். எனவே, அறைக்குள் நுழைந்தவுடன் இந்த பொருட்களை அகற்ற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், குளிப்பதற்கு முன் தண்ணீரை ஓற்றவும், டிவி ரிமோட்டை கிருமி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தகவல்களை மனதில் வைத்து, ஹோட்டல் அறையில் சுத்தத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்.