மனித வாழ்க்கைக்கு நெறிமுறைகள் ஏன் அவசியம்?

அக்டோபர் 16, உலகளாவிய நெறிமுறைகள் தினம்
Ethics of human life
Ethics of human life
Published on

னிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றோடு நெறிமுறைகளும் அவசியம். அவை மனித வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒரு மனிதனுக்கு சரியான நடத்தையை வழிகாட்டுவதற்கும் சமூக விதிமுறைகளின் அடிப்படையை புரிந்துகொண்டு நடப்பதற்கும் நெறிமுறைகள் மிகவும் முக்கியம்.

உலகளாவிய நெறிமுறைகள் தினம்: உலகளாவிய நெறிமுறைகள் தினம், மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், சிறந்த சமூகங்களை உருவாக்குவதற்கும் ஒரு செயலில் உள்ள நெறிமுறைகளுடன் ஈடுபடுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. சில விஷயங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உடன்படாத சூழ்நிலைகளில் அல்லது பாகுபாடான மற்றும் தேசியவாத உணர்வுகள் இருக்கும் சூழ்நிலைகளில் கூட, உலகளாவிய நெறிமுறைகள் தினம் ஒருவரையொருவர் செவிசாய்ப்பதற்கும், உலகை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பதற்கும் வழிகளை வழங்குகிறது.

நெறிமுறைகளின் அவசியம்:

வழிகாட்டி: மனிதர்களுக்கு நெறிமுறைகள் சிறந்த வழிகாட்டிகளாக விளங்குகின்றன. குழப்பமான சூழ்நிலையில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் அடையாளம் கண்டு கொள்ளவும் நெறிமுறைகள் தனிநபர்களுக்கு உதவுகின்றன. மேலும், அவை தார்மீக திசைக்காட்டிகளாக செயல்படுகின்றன. இதனால் மனிதர்கள் தொடர்ந்து பொறுப்புடன் செயல்பட உதவுகின்றன.

தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு: நெறிமுறைகள் தனிநபர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கிறது. பயனுள்ள தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நெறிமுறைகள் மிகவும் அவசியம். தொழில்முறை அமைப்புகளில் நெறிமுறைகள் நம்பகத் தன்மையையும் நற்பெயரையும் உருவாக்குகின்றன. வணிக உறவுகள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு இவை மிகவும் அவசியம்.

சமூக நல்லிணக்கம்: சமூக நல்லிணக்கத்திற்கு நெறிமுறைகள் வித்திடுகின்றன. நெறிமுறைக் கோட்பாடுகள் நீதியையும் நியாயத்தையும் ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் மோதல்களைக் குறைக்கின்றன. மேலும், சமூகத்தின் மதிப்புகளுடன் நெறிமுறைகள் ஒத்துப்போகின்றன. இது அனைவருக்கும் பயனளிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை மீதான கூட்டு ஒப்பந்தத்தை பிரதிபலிக்கிறது

பொறுப்புணர்வு மேம்பாடு: நெறிமுறை வழிகாட்டுதல்கள் பொறுப்புணர்வை மேம்படுத்துகின்றன. தனி நபர்கள் தங்களுடைய செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க ஊக்குவிக்கின்றன. அதேபோல, நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தில் கடைபிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்கின்றன.

மரியாதை மற்றும் கண்ணியம்: பிறருடைய உரிமைகள், கண்ணியம் மற்றும் தனித்துவத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன. இது ஒரு இணக்கமான சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மனித உரிமைகள், சட்டங்கள் மற்றும் சமூக நீதி இயக்கங்களின் நெறிமுறை கருத்தாய்வுகள் அனைத்து தனி நபர்களின் நலனுக்காகவும் வாதிடுகின்றன.

தார்மீக வளர்ச்சி: தனிநபர்கள் விவாதங்களில் ஈடுபடும்போது தங்களுடைய தார்மீக குணத்தை வளர்த்துக்கொள்ள நெறிமுறைகள் உதவுகின்றன. நேர்மை, இரக்கம்,கருணை, அன்பு போன்ற நற்பண்புகளை இவை ஊக்குவிக்கின்றன. சமூகங்களில் நெறிமுறைகளை கற்பிப்பது, குறிப்பாக இளைஞர்களிடையே விமர்சன சிந்தனை மற்றும் தார்மீகப் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் தொற்று நோய் உண்டாவதற்கான காரணங்கள்!
Ethics of human life

வழிகாட்டும் கொள்கை: பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சமத்துவத்தை மேம்படுத்தும் முடிவுகளை எடுப்பதில் நெறிமுறை கோட்பாடுகள் தலைவர்களுக்கு வழிகாட்டுகின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகள் சமூக மதிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தனி நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நெறிமுறை கருத்திலும் வேரூன்றி உள்ளன.

நுகர்வோர் தேர்வுகள்: நெறிமுறை கருத்தாய்வுகள் நுகர்வோருக்கு நன்மைகள் செய்கின்றன. நிலைத்தன்மை மற்றும் நியாயமான வர்த்தகம், தரும் பணத்திற்கேற்ப தரமான பொருட்கள் போன்ற அவர்களின் மதிப்புகளுடன் இணைந்து தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களை ஆதரிக்க மக்களை ஊக்குவிக்கிறது. சமூக நலன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கு நெறிமுறையாக செயல்படவும் நிறுவனங்களைத் தூண்டுகின்றன.

தனிப்பட்ட நிறைவு: நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வது ஒரு மனிதருக்கு உள் அமைதி, நிறைவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் உணர்வுக்குப் பங்களிக்கிறது. ஒருவரின் செயல்களை அவற்றின் மதிப்புகளுடன் சீரமைக்கிறது. நெறிமுறை நடத்தைக்கு முன்னுரிமை அளிக்கும் நபர்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து ஒருமைப்பாடு மற்றும் தார்மீக பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com