அது ஏங்க தங்கம் மட்டும் அவ்வளவு ஒசத்தி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Gold price Hike
Gold price
Published on

பண்டைக்காலம் முதல் இன்றைய காலம்  வரை மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் உலோகங்களில் ஒன்று தங்கம். தங்கத்தை விட பிளாட்டினம், வைரம் போன்ற உலோகங்கள் விலை மதிப்புடையதாக இருந்தாலும்  எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை நம் நாட்டில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகமாகவும், பெரும்பாலான மக்களின் சேமிப்பாகவும் தங்கமே உள்ளது. அதிக வசதி உள்ளவர்கள் கூட தங்கத்திலே அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அதற்கு என்ன  காரணம் என்றால் தங்கத்திற்கு இருக்கக்கூடிய தனித்துவமான பண்புகளும், அதற்கு கொடுக்கப்படும் மதிப்புகளும் தான். அத்தகைய தங்கத்தின் தனித்துவமான பண்புகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான உலோகங்களை பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக நாம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக இருக்கக் கூடிய இரும்பு, செம்பு, வெள்ளி, இப்படி எண்ணற்ற உலோகங்கள் நம்மால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  நாம் பயன்படுத்தும்  இரும்பானது தண்ணீர் பட்டாலோ அல்லது ஈரப்பதம் பட்டாலோ துருப்பிடிக்கும் இயல்புடையது. செம்பு நீர், காற்றுபடும்போது நீலப் பசை போன்று படரும் தன்மை உடையது. வெள்ளி காற்று மற்றும் ஈரப்பதால் கறுத்துப் போகும் இயல்புடையது.

ஆனால் தங்கமோ எந்த ஒரு பொருளுடனும் வினை புரிவதில்லை. காற்று, மழை, புயல், நிலம், நெருப்பு என எவ்வித இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படுவதில்லை. எந்த ஒரு உலகத்தோடு சேர்த்தாலும் அதன் தூய்மையிலேயும் தன்மையிலையேயும் மாறுபாடு ஏற்படுவதில்லை.  

தங்கத்தின் இத்தகைய தனித்துவமான பண்புகளுக்கு அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளே  காரணம். தங்கம் நீரை விட அடர்த்தியான உலோகம். அதனை வெவ்வேறு வடிவில் வளைக்கலாம். அவ்வளவு எளிதில் துருப்பிடிக்கவோ, கறை படியவோ செய்யாது. மேலும் தங்கம் ஒரு சிறந்த மின் கடத்தி. பெரும்பாலும் உடலில் அணியும் போது எந்தவித தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது. மேலும் தங்கம் நேர்மறை ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உலகில் பல ஆண்டுகளாகவே தங்கம் ஒரு ஆபரணமாகவும், பணமாகவும், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது.

தங்கம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கிறது. பெரும்பாலும் எரிமலை பாறைகளின் அடியில்  மிகச் சிறிய அளவில் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தங்கம் அதிகமாக சுரங்கம் தோண்டி, பாறைகளை வெட்டி, வேதியியல் முறையிலேயே பிரித்தெடுக்கப்படுகிறது. உயர்தரமான தாதுவில் ஒரு டன் மண்ணுக்கு 30 கிராம் என்ற அளவில் தங்கம் கிடைப்பதாக  சொல்லப்படுகிறது. மேலும் பூமிக்கு அடியில் படிய அடுக்குகளிடையேயும் தங்கம் தகடு அல்லது கம்பி வடிவில் காணப்படுகிறது. நம்முடைய பயன்பாட்டில் இருக்கக்கூடிய தங்கம் அதிகமாக  சுரங்கங்களில் இருந்து தான் வெட்டி எடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஓ! பூமியில் தங்கம் இப்படித்தான் உருவாச்சா? 
Gold price Hike

கடந்த 2007 ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்கா தான் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் முதன்மையானதாக இருந்து வந்துள்ளது. ஆனால், 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கப்படும் இடங்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அவ்வாறு வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 50 சதவீதம் நகைகள் ஆகவும் 40%  தங்க கட்டிகள் ஆகவும் மீதமுள்ள 10% தொழிற்சாலை பயன்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. 1970 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகபட்சமாக 1480 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமான கோலார் தங்க வயல் 1880 முதல் 2001 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்கத்தின் காரணமாக 2001 ஆம் ஆண்டு இந்தக் கோலார் தங்கவயல் மூடப்பட்டது. இதைத் தவிர்த்து தற்போது இந்தியாவில் மூன்று இடங்களில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. 

பொதுவாக நாம் தங்கத்தை குறிக்க கேரட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். இந்த கேரட் என்பது தங்கத்தின் தூய்மை தன்மையை குறிக்கிறது. தங்கம் 24% , 22% ,18%,14% என பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகிறது. தங்கத்தின் தூய்மை தன்மையில் அதிகபட்சமாக நாம் குறிப்பிடுவது 24 % தங்கம். இதில் 99.9% தங்கம் உள்ளது. எனவே இது மிகவும் மென்மையானதாகவும் உறுதித் தன்மை குறைந்ததாகவும் உள்ளது. எனவே அதிகமாக முதலீட்டுக்காக மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அடுத்ததாக 22%. இதில் 91.67% தங்கம் உள்ளது. 8.33% மற்ற உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. இதனையே நாம் 916 தங்கம் என்று கூறுகிறோம். இந்த 916  தங்கம் தான் தற்போது நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது. தங்கத்துடன் மற்ற உலோகங்களான காப்பர், ஜிங்க்  சேர்க்கும்போது அதன் உறுதித் தன்மை அதிகப்படுத்தப்பட்டு ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் செய்வதற்கு பயன்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 18% தங்கம். இதில் 6% மற்ற உலோகங்கள் சேர்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
தங்கம் மற்றும் வெள்ளி நகை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்! 
Gold price Hike

ஆரம்ப காலகட்டங்களில் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக நாணய வடிவிலேயே இருந்து வந்துள்ளது. அதன் பின்பு தான் மக்கள் அதிகமாக அதனை ஆபரணமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை அதிகமாக தங்கத்தை ஆபரணமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தான்  முதலிடத்தில் உள்ளது.

எது எப்படியோ இன்றும் கூட தங்கம் வாங்க வேண்டும் என்பதும் தங்கத்தை  ஆபரணமாக அணிய வேண்டும் என்பதும் பலரின் தணியாத தாகமாகவே இருந்து வருகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com