பூனை குறுக்கே போனா வண்டியை ஏன் நிறுத்தணும்? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு!

Cat
Catimg credit - sheba.com.sg
Published on

நாம பைக்கிலோ, காரிலோ வேகமா ஆபீசுக்குக் கிளம்பிட்டு இருப்போம். திடீர்னு எங்கிருந்தோ ஒரு கறுப்பு பூனை மின்னல் வேகத்துல ரோட்டை கிராஸ் பண்ணி ஓடும். அவ்ளோதான்! உடனே வண்டியை ஓரம் கட்டி நிறுத்திடுவோம். "யாராவது முதல்ல போகட்டும், அப்புறம் நாம போலாம்"னு காத்திருப்போம். 

இந்த பழக்கம் நம்ம ஊர்ல பல வருஷமா ஊறிப்போன ஒண்ணு. ஏன் இப்படிப் பண்றோம்னு கேட்டா, "அது அபசகுனம், காரியம் விளங்காது"னு பெரியவங்க சொல்வாங்க. இதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யமான கதையைத் தெரிந்து கொள்வோம் வாங்க.

இது நம்ம ஊரு பழக்கமா?

உண்மையைச் சொல்லணும்னா, கறுப்பு பூனையைத் துரதிர்ஷ்டமா பார்க்குற பழக்கம் இந்தியாவுல மட்டும் உருவானது இல்லை. இது ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான ஒரு நம்பிக்கை. அந்தக் காலத்து ஐரோப்பாவில், கறுப்பு பூனைகளை மந்திரவாதிகள் மற்றும் சூனியக்காரர்களோட ஒப்பிட்டுப் பார்த்தாங்க. ராத்திரி நேரத்துல மந்திரவாதிகள் பூனை உருவம் எடுத்து உலா வருவாங்கனு மக்கள் பயந்தாங்க. அந்த பயம் தான் காலப்போக்குல நம்ம ஊருக்கும் பரவி, ஜோதிட நம்பிக்கைகளோட கலந்துடுச்சு.

இந்தியாவில் ஏன் நிறுத்துறோம்?

நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும், இது பூனை மேல இருக்கிற கோபம் இல்லை; அது "நேரம்" மேல இருக்கிற கணிப்பு. பழைய சாஸ்திரப்படி, ஒரு பயணத்தை ஆரம்பிக்கும்போது எந்தத் தடங்கலும் இருக்கக்கூடாது. பூனை குறுக்கே போவது என்பது ஒரு கவனச் சிதறல் அல்லது ஒரு சின்ன இடைவேளை. "இப்போ போக வேண்டாம், ஒரு நிமிஷம் நின்னு, மூச்சு விட்டுட்டு, அப்புறம் கிளம்புங்க"னு சொல்றதுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறைதான் இது. 

இதையும் படியுங்கள்:
நமக்கு நாமே விஷமாக இருக்கிறோமா? அதை உணர்த்தும் 7 அறிகுறிகள் இதோ!
Cat

வெளிநாடுகளில் பூனைதான் ராசி!

நமக்கு வில்லனா தெரியுற அதே கறுப்பு பூனை, வேறு சில நாடுகளில் ஹீரோ. ஆமா, ஜப்பான்ல ஒரு கறுப்பு பூனை குறுக்கே வந்தா, அது மிகப்பெரிய அதிர்ஷ்டமாம். செல்வம் வீடு தேடி வரும்னு நம்புறாங்க. அதேபோல ஸ்காட்லாந்து நாட்டுலயும் வீட்டு வாசல்ல கறுப்பு பூனை வந்தா, விருந்தாளிகள் வருவாங்க, நல்லது நடக்கும்னு கொண்டாடுறாங்க. எகிப்துல சொல்லவே வேண்டாம், அவங்க பூனைகளைக் கடவுளாவே கும்பிட்டாங்க. அப்போ, பூனை மேல தப்பு இல்ல, நாம பார்க்குற பார்வையிலதான் வித்யாசம் இருக்கு.

கறுப்பு பூனை அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்பது நாம அதை எப்படி எடுத்துக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான். ஒரு அப்பாவி விலங்கு நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்கும்னு நம்புறது கொஞ்சம் வேடிக்கையா இல்லையா? அடுத்த முறை பூனை குறுக்கே போனா, பதறாம வண்டியை ஓட்டுங்க. 

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
Cat

வேணும்னா ஒரு நிமிஷம் நின்னு நிதானமா போறதுல தப்பில்லை, ஆனா அதுக்குக் காரணம் பாதுகாப்புதானே தவிர, பூனை இல்லை. அதிர்ஷ்டம்ங்கிறது ரோட்ல இல்லை, அது நம்ம நம்பிக்கையிலதான் இருக்கு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com