உங்கள் சிகை அலங்காரம் சொல்லுமே உங்கள் குணாதிசயத்தை!

Your hairstyle says your personality
Your hairstyle says your personalityhttps://tamil.boldsky.com
Published on

வ்வொருவரும் ஒவ்வொரு விதமான சிகை அலங்காரம் செய்ய விரும்புவார்கள். அவர்களின் சிகை அலங்காரத்திற்கு ஏற்ப அவர்களின் குணமும் அமைந்திருக்கும். அது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நடு வகிடு எடுத்து தலை சீவுபவர்கள்: நடு வகிடு எடுத்து தலை சீவுபவர்கள் நல்ல, அமைதியான குணமுடையவர்கள். எப்போதும் பிறரால் சூழப்பட்டு இருப்பார்கள். பிறர் இவர்களிடம் நட்பு கொள்ள விரும்புவார்கள். புதிய இடத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மிகவும் அனுசரித்துப்போகும் குணமுடையவர்கள்.

2. சுருட்டை முடி: சுருட்டை முடி உடையவர்கள் பொதுவாக தங்கள் வேலைகளை விரைவாக முடிப்பதில் வல்லவர்கள். அன்பான குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். தாராளமான மனதுடையவர்கள். நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு உடையவர்கள். இவர்களால் ஒரு விஷயத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது.

3. அலையலையான முடி: அலை அலையான, பளபளப்பான கூந்தல் கொண்டவர்கள் அதிக ஆற்றல் மிக்கவராகவும், வலிமையானவராகவும், புதுமையானவராகவும், மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர்கள் கூட்டத்தில் இருக்க விரும்பினாலும் சில சமயங்களில் தனிமையிலும் இருக்க விரும்புவார்கள்.

4. அடர்த்தியான முடி: அடர்த்தியான முடி அமைப்பு கொண்டவர்களுக்கு உறுதியான மனம் இருக்கும். எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். ஆற்றலுடன் வேலைகளை செய்வார்கள். ஆனால், பிடிவாத தன்மையுடன் இருப்பார்கள்.

5. அளவான நீளமுடைய முடி: மிக நீளமாகவோ அல்லது மிக குறுகியதாகவோ இல்லாமல் அளவான நீளமுடைய முடி உடையவர்கள் பொறுமை இல்லாமல் இருப்பார்கள். எளிதில் விரக்தி அடையும் மனப்பான்மை உடையவர்கள். தர்க்க ரீதியாக வாக்குவாதம் செய்ய விரும்புவார்கள். ஆனால், நல்ல சிந்தனையாளர்.

6. நீளமான கூந்தல்: நீளமான கூந்தல் உடையவர்கள் நல்ல படைப்பாற்றல் மிக்கவர்கள். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். நல்ல ரொமான்டிக் உணர்வு மிக்கவர்கள்.

7. குட்டையான கூந்தல்: இவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை கொண்டவர்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் செய்ய விரும்புவார்கள். தன்னம்பிக்கை அதிகம். தங்களுடைய தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

8. ஒழுங்கற்ற கூந்தல்: இந்த மாதிரி கூந்தல் அமைப்பு கொண்டவர்களுக்கு கடினமான குழந்தைப் பருவம் இருக்கும். இவர்களைப் பெற்றோர் அவ்வளவாக கவனித்திருக்க மாட்டார்கள்.

9. வலது புறம் வகிடு எடுப்பவர்கள்: வலது புறம் வகிடு எடுத்து தலை சீவுபவர்களுக்கு மூளையின் வலது புறம் அதிகமாக வேலை செய்யும். ஆக்கப்பூர்வமானவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், மனக்கிளர்ச்சியுடையவர்களாகவும் கருதப்படுவார்கள்.

https://gossip.sooriyanfm.lk

10. இடதுபுறம் வகிடு எடுப்பவர்கள்: இடதுபுறம் வகிடு எடுத்து தலை சீவுபவர்கள் இடது பக்க மூளையை அதிகம் உபயோகிப்பார்கள் ஆண்மைத் தன்மை கொண்ட குணம் உடையவர்கள். சவாலான பணிகளை செய்வதில் நாட்டமுடையவர்கள்.

11. மழுங்கிய வெட்டு (Blunt cut): பிளண்ட் கட் ஹேர் ஸ்டைலை உடையவர்கள் வாக்குவாதம் செய்பவர்கள். வாழ்வில் இலக்குகளை அமைத்து அதை நோக்கி செயல்படுவார்கள். நேரத்தை எப்போதும் வீணடிப்பதை விரும்பவே மாட்டார்கள். எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்க விரும்புவார்கள்.

12. அடுக்கு சிகை அலங்காரம் (Layered hairdo): இவர்கள் பர்பெக்சனிஸ்ட் என்ற பெயர் பெற்றவர்கள். எந்த வேலையிலும் பரிபூரணத்துவத்தை எதிர்பார்ப்பார்கள். எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதேபோல செயல்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலை முடக்கும் சர்கோபீனியா பற்றித் தெரிந்து கொள்வோம்!
Your hairstyle says your personality

13. உயர குதிரைவால் (High ponytail): உயரமாக தூக்கி போடப்பட்ட குதிரைவால் உங்களுடைய சிகை அலங்காரமாக இருந்தால் நல்ல சிந்தனையாளராக இருப்பார்கள். தன்னுடைய தேவைகளை விட பிறரின் தேவைகளை முக்கியமாக கருதுபவர்கள்.

14. பின்னல்: முடியை பின்னி பின்னல் போடுபவர்கள் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். சொந்த தோற்றத்தைப் பற்றி அவ்வளவாக கவலைப்படாதவர்கள். ஆனால், தன்னுடைய திறன் மற்றும் ஆற்றல் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள் கூறும் கூற்று உண்மையானது மற்றும் முக்கியமானதாக இருக்கும்.

15. கொண்டை: கொண்டை போடுபவர்கள் தங்களுக்கான கற்பனை உலகில் வாழ விரும்புவார்கள். பொதுவெளியில் சகஜமாக பழகக் கூடியவர்கள். தங்கள் மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ்வார்கள். அதனால் அவர்கள் பிறர் பார்வையில் மிகுந்த அபிமானத்திற்கு உரியவர்களாகக் கருதப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com