இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Smart girl
Smart girlhttps://tamil.boldsky.com

புத்திசாலித்தனம் என்பது ஒருவருடைய பேச்சு, நடத்தை மற்றும் செயல்களில்தான் வெளிப்படும். ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால் இவை அனைத்தையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடிப்பார். ஒரு அறிவார்ந்த பெண் தனது உரையாடல்களில் தெளிவு, ஆழம் மற்றும் சிந்தனையை பிரதிபலிக்கும் சொற்றொடர்களை அடிக்கடி பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்தக்கூடிய சொற்றொடர்களின் வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. யோசித்துச் சொல்கிறேன்: யாராவது ஒரு அறிவார்ந்த பெண்ணிடம், ‘இதற்கு உடனே ஒரு முடிவு சொல்லுங்கள்’ என்று சொல்லும்போது உடனே பதில் சொல்லாமல், ‘யோசித்துச் சொல்கிறேன்’ என்று சொல்லுவார். இந்த சொற்றொடரில் ஒரு முற்போக்கு சிந்தனை மற்றும் அணுகுமுறை உள்ளது. அதேசமயத்தில் இதில் ஒரு தந்திரமும் அடங்கியுள்ளது. உடனடியாக யாராலும் சிறந்த முடிவு எடுக்க முடியாது. இந்தப் பதிலில் நீண்டகால விளைவுகளில் அக்கறை கொண்டவர் அவர் என்பதை காட்டுகிறது. அனுமானங்கள் அல்லது பாரபட்சத்தைக் காட்டிலும் உண்மைகள் மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் தனது முடிவுகளை எடுப்பார் என்பது இதை காட்டுகிறது.

2. ‘நீங்கள் சொல்ல வருவதை நான் நன்றாகப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்’: இது அவருடைய திறந்த மனப்பான்மையைக் குறிக்கிறது மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் அவர் அதை ஆராய விரும்புகிறார் என்பதையும் குறிக்கிறது. தன்னை பிறருடைய நிலையிலிருந்து பார்க்கும் எம்பதி என்கிற பச்சாதாபத்தையும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதில் உள்ள உண்மையான ஆர்வத்தையும் காட்டுகிறது.

3. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த முடியுமா?: இப்படிக் கேட்பதன் மூலம் அவர் விவாதத்தை முழுமையாக புரிந்து கொள்வதை விரும்புகிறார். பிறர் கருத்தை தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் சிக்கலை தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்று நம்புகிறார்.

4. எனது அனுபவத்தில்: இந்த சொற்றொடர் அவரது தனிப்பட்ட அல்லது தொழில் முறை அனுபவங்களை அடிப்படையாகப் பயன்படுத்தி அவர் தனது அறிக்கைகளுக்கு ஒரு நம்பகத் தன்மையான சூழலை வழங்குகிறார் என்பதை குறிக்கிறது. உரையாடல்களில் அவருடைய அதிகாரத் தன்மையையும் நம்பகத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
அனுபவம் கற்றுத் தருவது எதை தெரியுமா?
Smart girl

5. எனக்குத் தெரியவில்லை. நாம் சேர்ந்து கண்டுபிடிப்போம்: எதையும் உடனடியாக எடுத்த எடுப்பில் அவர்கள் நம்ப மாட்டார்கள் சரியான சான்றுகள் இல்லாமல் நம்ப மாட்டார்கள். எனவே, எனக்கு தெரியவில்லை சேர்ந்து கண்டுபிடிப்போம் என்று சொல்வார்கள்.

6. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்: இது அவருடைய பச்சாதாப உணர்வை காட்டுகிறது. அவருடைய பரந்துபட்ட அறிவையும் உற்றுநோக்கும் தன்மையையும் பிறர் மேல் அவர் வைத்திருக்கும் அனுதாப உணர்வையும் காட்டுகிறது. ஒரு புத்திசாலியான பெண் பிறரை அவர் நிலையிலிருந்து உணர்ந்து கொள்வார் என்பதை காட்டுகிறது

7. ஒப்புக்கொள்ளாததை ஒப்புக் கொள்வோம்: ஆங்கிலத்தில் இதை ‘லெட் அஸ் அக்ரீ பார் டிஸ்அக்ரீ’ என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் உண்டு என்பதை இது காட்டுகிறது. மேலும், இதை ஒரு புத்திசாலி பெண் சொல்லும்போது அவருடைய ஆழ்ந்த மனப்பக்குவமும் புரிந்துகொள்ளும் தன்மையும் விளங்குகிறது. இரு தரப்பிலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும் என்பதையும் இதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது.

மேற்கண்ட சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலிப் பெண்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com