இலவசம்! இலவசம்!

இலவசம்! இலவசம்!

வாழ்வியல்

ஓவியம்: தமிழ்

பரிசு!

பிறந்தேன், இருந்தேன், வளர்ந்தேன், வாழ்கிறேன்

என்ற ரீதியில் இலக்கில்லாமல் வாழ்வது

நமக்கு நாமே செய்யும் துரோகம்.

சிறந்தேன், சிலர் வாழ்க்கையைச் சிறப்பித்தேன்,

இறந்தபிறகும் சில உள்ளங்களில்  வாழ்கிறேன்

என்று வாழ்வது நமக்கு நாமளிக்கும் மிகச்சிறந்த பரிசு.

இலவசம்!

இலவசம்! இலவசம்!

உடல் நலத்தில் அக்கறை இல்லையா?

வியாதிகள் இலவசம்.

விரைவாக இளைக்க வைக்கும் மாத்திரைகளா?

பின் விளைவுகள் இலவசம்.

நல்லுணவும் உடற்பயிற்சியும் உங்கள் வழக்கமா?

ஆரோக்கியமான வாழ்க்கை இலவசம்.

நலம்!

ஒரு பெண் தன் உடநலத்தைப் பேணுவது

சுயநலம் அல்ல; குடும்ப நலம்.

சமம்!

வேலைபார்க்கும் இடத்திலும் வீட்டிலும்

பெண்களுக்குத் தேவை சலுகைகள் அல்ல;

மதிப்பும், சமவாய்ப்பும்.

சுவாரஸ்யம்!

மகிழ்ச்சியான தம்பதிகள் பிரிந்து விடுவது

திரைப்படங்களுக்குச் சுவாரஸ்யம்;

மகிழ்ச்சியான தம்பதிகள் மகிழ்ச்சியாகவே வாழ்வது

வாழ்க்கைக்குச் சுவாரஸ்யம்.

நம்பிக்கை!

பெற்றோர் தங்கள் பிரச்னைகளைச்

சுமூகமாகத் தீர்க்கத் தெரிந்தால்தானே

பிள்ளைகளுக்குத் தங்கள் பிரச்னையோடு

பெற்றோரை அணுக நம்பிக்கை வரும்!

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு டைனோசர் இருந்தது.

அதை நாம் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பள்ளிகளில் பாடம் எடுக்கும்போது, “முன்பு டைனோசர் என்றொரு மிருகம் இருந்து. அது அடியோடு அழிந்து விட்டது” என்று கதையாச் சொல்கிறோம்.

அதுபோல், பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதிகள் மறைந்து, கற்பனைக் கதைகள் ஆகி, “முன்னொரு காலத்துல, பெண்களுக்கு என்னவெல்லாம் கஷ்டம் இருந்தது தெரியுமா; எப்படியெல்லாம் கட்டுப்படுத்தப் பட்டார்கள் தெரியுமா” என்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் காலம் வராதா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com