ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க அறிவிக்கக் கோரி போராடும் இந்திய தம்பதிகள்!

ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க அறிவிக்கக் கோரி போராடும் இந்திய தம்பதிகள்!

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபய் டாங் மற்றும் சுப்ரியோ சக்ரவர்த்தி இருவரும் தங்களது ஒரே பாலின திருமணத்தை இந்தியாவில் உரிய பாதுகாப்புடனும் குடும்பத்தினர் ஒப்புதலுடனும் நடத்தியபோது, அந்த ​​ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை - ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை அடுத்து விரைவில் அது நடக்கலாம் என நம்பப்படுகிறது.

ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக மாற்றிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திங்கட்கிழமை முதல், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரே பாலின திருமண உறவுகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

"சட்டபூர்வமான திருமணங்களுக்கென அரசும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வரையறுத்திருக்கின்ற அத்தனை உரிமைகளும், சலுகைகளும்   ஒரே பாலின தம்பதிகளான எங்களுக்கு இதுவரை அங்கீகரிக்கப்படவே இல்லை, என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் மேலாளரானஅபய்  டாங்.

எனவே அத்தகைய உரிமைகளைக் கோரி இந்தத் தம்பதியினர் வழக்குத் தொடர்ந்தனர், நீதிமன்றம் அவர்களின் மனுவை விசாரிக்க முடிவு செய்தபோது, ​​​​டாங்குக்கு மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வராத குறை!

"இது நாங்கள் சில காலமாகவே கனவு கண்ட ஒன்று" என்கிறார் 36 வயதான டாங்.

இவர்களைத் தவிர வேறு பல ஒரே பாலின தம்பதிகளும் இதையே செய்துள்ளனர், எனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் ஒரே வழக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.

"எங்கள் உறவு மற்ற உறவுகளைப் போலவே உண்மையானது. ஏன் அந்த உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்?" ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்துபவரும் அபயின் துணைவருமான சக்ரவர்த்தி கேள்வி எழுப்புகிறார். இவர்கள் இருவரும் 2021 இல் சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர், தங்களது திருமணம் குறித்து எதிர்மறை வார்த்தைகள் வெளிப்பட்டால் திருமணத்திற்கான ஒட்டுமொத்த சந்தோசமும் கேள்விக்குறியாகி விடும் என அச்சத்தில் நகரத்தை விட்டு வெகு தொலைவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகின்றனர்.

எங்களது திருமணத்தில் "போலீஸ் பாதுகாப்பு இருந்தது, பவுன்சர்கள் இருந்தனர். ஆனாலும் அதையும் தாண்டி எந்த ரிஸ்கையும் எடுக்க நாங்கள் விரும்பாததால் அப்படிச் செய்தோம் என்கிறார் 32 வயதான சக்ரவர்த்தி.

இந்த இரு ஆண்களும் கடந்த பத்தாண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள், ஆனால் இந்து திருமண சட்டத்திற்கு உட்பட்டு திருமணம் செய்து கொண்டு அதன் அத்தனை பலன்களையும், உரிமைகளையும், அங்கீகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இயல்பான தம்பதிகளோடு ஒப்பிடுகையில் சட்டத்தின் பார்வையில் இப்போதும் அவர்கள் "வெறும் அந்நியர்களாகவே கருதப்பட்டு வருகிறார்கள் என்ற வருத்தம் இவர்கள் இருவருக்கும் இருக்கிறது.

இந்தியாவில் LGBTQ உரிமைகள் சமீபத்திய ஆண்டுகளில் பரவலாக விரிவடைந்துள்ளன, தற்போதைய வழக்கு வெற்றிகரமாக அமைந்து விட்டால், தைவானுக்குப் பிறகு ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் இரண்டாவது ஆசிய அதிகார வரம்பாக நமது நாடு மாறும்.

2014 ஆம் ஆண்டில், திருநங்கைகளுக்கு "மூன்றாம் பாலினமாக" அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பாலியல் நோக்குநிலையை தனியுரிமைக்கான அடிப்படை உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதாக அங்கீகரித்தது.

ஓராண்டுக்குப் பிறகு, ஓரினச்சேர்க்கையைத் தடைசெய்யும் காலனித்துவ காலச் சட்டத்தை முறியடிக்கும் முக்கியத் தீர்ப்பு வந்தது.

 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் LGBTQ சமூகம் தொடர்ந்து எதிர்ப்பை எதிர்கொள்கிறது, இதில் மதக் குழுக்கள் மற்றும் இந்தியாவின் இந்து தேசியவாத அரசாங்கம் உட்பட பலரும் இவர்களைத் தீண்டத்தகாதவர்களாக அணுகும் முறை நீடித்து வருகிறது.

"திருமணம் என்பது இனப்பெருக்கச் செயல் அல்ல... திருமணம் என்பது ஒருவரையொருவர் அன்புடனும், பொறுப்புடனும், அக்கறையுடனும் வாழ விரும்பி காதலிக்கும் இருவரின் செயலாகும்.” என்று கூறும் ஒரே பாலினத் தம்பதிகள், “ஆரோக்கியமான விவாதத்தை விரும்பாதவர்களிடம் மனநிலை மாற்றத்தை கட்டாயப்படுத்துவது கடினம்” என்று கூறிகின்றனர்.

இவர்களது வேதனைகளுக்கு உச்சநீதிமன்றம் சரியான வகையில் தீர்ப்புகளை வழங்குமா? என்பதற்கான பதில் காலத்தின் கைகளில் மட்டுமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com