நகைகளும், பலன்களும்!

நகைகளும், பலன்களும்!

*தங்கம், வெள்ளி, செம்பு நகைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.

*தங்க நகைகளை உடம்பின் மேல் பகுதியிலும் வெள்ளி நகைகளை கால்களிலும் அணிய வேண்டும்.

தோடு அணியக் காரணம்:

காது குத்தி தோடு அணிவதால் நரம்பானது தூண்டப்பட்டு
கண் பார்வைக்குக் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மூளையின் செயல்திறன் அதிகரிக்க உதவுகிறது.

வளையல் அணியக் காரணம்

ளையல் அணிவதால் நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்படாது. நம் கைமணிக்கட்டுகளில் உள்ள துடிப்புடன் வளையல் உரசும்போது ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கிறது. வளையல்கள் அந்தப் பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணுக்கள் உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.

மூக்குத்தி அணியக் காரணம்

மூக்குத்தி நம் உடலில் உள்ள கெட்ட வாயுவை வெளியேற்றுகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. பார்வை கோளாறுகளைச் சரி செய்கிறது. ஞாபகசக்தி அதிகரிக்கிறது. மூக்கில் உள்ள சில நாடிப்புள்ளிகளுக்கும் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதால் மூக்குத்தி அவ்வுறுப்புகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நெற்றிச்சுட்டி அணியக் காரணம்:

லையின் வகிடுப் பகுதியில் அணிவதால் நெற்றியிலிருந்து காதுவரை செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெறுகிறது. தலைவலி, சைனஸ் பிரச்னையைச் சரிசெய்கிறது.

மோதிரம் அணியக் காரணம்

ம் கையில் சுண்டு விரலுக்குப் பக்கத்தில் இருக்கும் விரலில்தான் மோதிரம் அணிய வேண்டும். மோதிரம் அணியும் விரலில் உள்ள நரம்பு இதய நரம்புகளுடன் இணைகிறது. ஆண், பெண் இனப் பெருக்க உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. மோதிரம் அணியும்போது இதயநோய் வயிற்றுப் பிரச்னைகள் வராது.

கழுத்தில் அணியக் காரணம்

ழுத்தில் உள்ள நரம்புகள் வலிமை பெறுகின்றன. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள ரத்த ஓட்டம் சீராகும்.

கொலுசு அணிய காரணம்:

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைத் தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின்பகுதியில் இருக்கும் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனைத் தூண்டுகிறது. கர்ப்பப்பை இறக்க பிரச்னையைத் தடிமனான கொலுசு தீர்க்கிறது.

கால் விரலில் மெட்டி அணியக் காரணம்:

மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை சீராகிறது. வெள்ளியில் செய்த மெட்டியைத்தான் விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் வெள்ளியில் இருக்கக்கூடிய காந்த சக்தியானது காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி கருப்பையில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com