காலி மனை மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் ?

காலி மனை மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் ?

திர்காலத்தில் வீடு கட்டுவதற்காக, உங்களிடம் காலி மனை உள்ளதா ? அதனை சும்மா வைத்திருப்பதை விட, அதன் மூலம் ஏதாவது லாபம் ஈட்ட பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தோட்டம் போடுவது - காய்கறித் தோட்டம், பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம் போன்றவற்றின் மூலம், பணம் ஈட்டலாம்ம்

வாகனங்களை நிறுத்துமிடம்- சிற்றுந்து, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை நிறுத்த அனுமதிப்பதன் மூலம், பணம் ஈட்டலாம்

சாமான்களின் கிடங்கு - அருகிலுள்ள அங்காடிகளின் சாமான்களை சேமித்து வைப்பதற்கான கிடங்காக (warehouse) வைத்திருந்து பணம் ஈட்டலாம். இதற்காக கொட்டகை மட்டும் போட்டு வைக்கலாம்.

மாட்டுக் கொட்டகை - மாடுகளை வளர்த்து பால் கறந்து, பால் வியாபாரம் செய்யலாம். பால் சார்ந்த இதர தொழில் களான பால்கோவா, பால் பேடா போன்றவற்றை விற்பனை செய்யலாம்.

குழந்தைகள் விளையாட்டு அரங்கு - குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவான சறுக்கு, ஊஞ்சல், காற்று அடைத்த விளையாட்டு அரங்கம் நிறுவி, கட்டணம் வாங்கி பணம் ஈட்டலாம்.

சூரிய ஒளி மின்சாரம் - சூரிய ஒளி மின்சார தகடுகளை நிறுவி மின்சாரம் சேமிக்கலாம் - சூரிய ஒளி மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை விற்று பணம் ஈட்டலாம்

காற்று மின்சாரம் - காற்றாலை அமைக்கலாம். காற்றின் மூலமாக மின்சாரம் சேமித்து, பணம் ஈட்டலாம்

இயற்கை சார்ந்த புகைப்படம் - மரங்கள் நிறைய இருந்தால், இயற்கை சூழ்நிலை நிலவினால், திருமணத்திற்கான முன்னான, பின்னான புகைப்படம் எடுக்க விட்டு, பணம் ஈட்டலாம். தொலைகாட்சி நாடகங்கள் எடுக்க அனுமதித்து பணம் ஈட்டலாம்.

விளையாட்டரங்கம் - சிறகுப் பந்து, வாலிபால் , கூடைப் பந்து போன்றவற்றிற்கான விளையாட்டரங்கம் நிறுவி, கட்டணம் வசூலித்து பணம் ஈட்டலாம்.

கண்காட்சி - புத்தகத் திருவிழா, கைவினைப் பொருட்கள் திருவிழா என கண்காட்சிகளுக்கு சிறிய கூடாரம் போட அனுமதி அளித்து, பணம் ஈட்டலாம்

தோட்ட உணவகம்(garden restaurant) - செடிகள் சூழ, தோட்டத்துடன் திறந்த வெளி தோட்ட உணவகம் நிறுவி, பணம் ஈட்டலாம்.

சேவை நிறுவனங்கள் விளம்பரம் - கைப்பேசி, இணையம், வங்கி போன்ற சேவை நிறுவனங்களுக்கு , நுகர்வோரை ஈர்க்க , கூடாரம் போட்டு, பதாகை தாங்கி வாடிக்கையாளர்களை சேர்க்க அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்.

கைப்பேசி கோபுரம் - கைப்பேசி நிறுவனங்கள் கோபுரங்கள் நிறுவ அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்.

நாற்றுப் பண்ணை(nursery) - செடிகளை விற்க நாற்றுப் பண்ணைகளுக்கு அனுமதி அளித்து, பணம் ஈட்டலாம்.

மாடு உணவு - நிறைய புற்கள் இருந்தால், மாடுகளை மேய்க்க அனுமதி அளித்து, பணம் ஈட்டலாம்.

தாவரவியல் ஆராய்ச்சி - இடத்தில் நிறைய மரங்கள், செடிகள் இருந்தால், தாவரவியல் மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய நிலத்தை வழங்கி பணம் ஈட்டலாம்.

விழா மேடை - மேடை அமைத்து, திருமண நிச்சய தார்த்தம், பிறந்த நாள் விழாக்கள் போன்ற விழாக்களுக்கு அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்.

கொண்டாட்டங்கள் - அருகிலுள்ள சிறார் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம், அம்மன் கோவில் ஆடித் திருவிழா போன்றவற்றிற்கு மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்

இயற்கை ஆர்வலர்கள்- நிலத்தின் அருகில் இயற்கை சூழல் நிலவினால், இயற்கை ஆர்வலர்கள் கூடாரம் அமைத்து இரவு தங்க அனுமதித்து பணம் ஈட்டலாம்.

காயலான் கடை - காயலான் கடை சாமான்களை நிரப்பி வைக்க அனுமதி அளித்து, பணம் ஈட்டலாம்.

விளையாட்டு பயிற்சி மையம் - கிரிக்கெட் பயிற்சி, வாலிபால் பயிற்சி போன்ற நிறுவனங்களை நிலத்தை பயன்படுத்த அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்

சிறிய கடைகள்- சிறிய மளிகைக் கடை, தையல் கடை போன்றவற்றுக்காக சிறிதாக கடை கட்டி, வாடகைக்கு விடலாம்.

தானியங்கி பணப் பொறி(ATM) - குட்டியாக அறை அமைத்து, வங்கிகள் தானியங்கி பணப்பொறிகளை(atm) நிறுவ அனுமதி அளித்து, பணம் ஈட்டலாம்.

திறன் சார் பயிற்சி மையம் - தனியார் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ஏதேனும் திறன் சார்ந்த பயிற்சிகளை நடத்த அனுமதி அளித்து பணம் ஈட்டலாம்.

குறு தொழில் - சிறிய கொட்டகை நிறுவி, அதில் வீட்டு சாக்லேட், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற சிறிய பொருட்களைத் தயாரிக்கும் குறு தொழில் நிறுவி, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

இப்படியாக, உங்களது காலி இடத்தினை சும்மா வைத்திருக்காமல், அதன் மூலம் லாபம் ஈட்ட பல்வேறு யோசனைகள் உள்ளன. உங்களுக்கு எது ஒத்துவருமோ, அதனைப் பயன்படுத்தி, லாபம் அடையுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com