சளைக்காத மனமே வெற்றிக்குக் காரணம்!

motivation article
motivation articleImage credit - pixabay

வாழ்க்கையில்  வெற்றிக்கான தாரக மந்திரம் சளைக்காத மனம்தான். தோல்வி ஏற்படுவது இயல்பு. மனம் சளைப்பது சகஜம். ஏனெனில் நமது உடலில் கூட ஒருவித பருவகாலம் தோன்றி மறைவதாக  மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே உடல் தளர்ந்து சகஜம். மனமும் தளர்ந்து போவது சகஜம். விடாமுயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. விடாமுயற்சியுடன் கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு முன்னேறிய பலருக்கு பெரும் மேதைத்தனமோ கல்வியோ  திறமையோ இல்லை. இவர்கள் அதிலேயே கிடந்து உழன்று கொண்டிருந்த காரணத்தால் முன்னுக்கு வருகிறார்கள்.

படிப்போ திறமையோ இல்லாத சாதாரண மனிதர் வேறு தொழிலில்லாமல் அரசியல் கூட்டங்களுக்கு சென்று பேசிப் பேசி பின் தலைவரானார். நம்மிடையே நடமாடும் இத்தகைய பல அரசியல்வாதிகளளை. நீங்கள் அடையாளம் காணலாம். இதற்குக் காரணம் அத்துறையிலேயே.  இருந்து பின்னால் பிரகாசிக்கிறார்கள். அரசியல் என்று அல்ல விஞ்ஞானத் துறையில் கூட சாதாரணமாய் உள்ளே நுழைந்தவரகள் விடாமுயற்சியாலும் உறுதியாலும்  நோபல் 'பரிசு வாங்கியிருக்கிறார்கள்.

பாஸ்டியூர் என்ற விஞ்ஞானி  "ஒன்றை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதுதான் என் வலிமை" என்றார். ஓரே கட்சியில் விடாப்பிடியாய் உழன்றுகொண்டிருக்கும் ஒரு சாதாரண  தொண்டருக்குள்ள செல்வாக்கும், மூன்று நாளைக்கு ஒரு கட்சி மாறும் தலைவருக்கும் உள்ள செல்வாக்கையும்  ஒப்பிட்டுப் பாருங்கள்.

அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதியாக இருந்த நிக்சன்  ஜான் கென்னடிபோல் ஒரு அறிவாளி அல்லர். லிண்டன் ஜான்சன் போல்  திறம் படைத் தவரரும் அல்ல, ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் போல்  மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவருமல்லர். 

1960 இல் ஜனாதிபதி பதவிக்கு நின்ற நிக்சன் தோற்றார். பத்திரிகைக்காரர்கள் அவர் சகாப்தம் முடிந்தது என எழுதினார்கள். ஆனால் அவரோ தமது கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்திக்கொண்டு மீண்டும் தன் கட்சியின் ஒப்புதலைப் பெற்றார். விடாமுயற்சிக்கும்.  உறுதிக்கும் நிக்சன் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உறுதியே அவரை ஜனாதிபதி பல ஆக்கியது‌. அமெரிக்க டெலிவிஷன் செய்தி ஆசிரியர்களுள்  எரிக் சவரைட் புகழ் பெற்றவர்.

இதையும் படியுங்கள்:
ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!
motivation article

அவர் ஏழுதுகிறார் "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கிக் கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழியில்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து நடக்க முடியாத நிலை. சுமார்  140 மைல்கள் நடந்தால்தான் எங்கள் முகாமுக்குள் போய்ச் சேரலாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும் நடந்தேன். ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும்  என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக நடந்தேன். சில நாளைக்குப் பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."

இக்கட்டான நேரங்களில் அந்த முதல் மைலை மட்டும் எண்ணி நடப்பதுதான் உறுதி_ விடாமுயற்சி. "ஆயிரம் மைல் பயணம் முதல். மைலைக்  கடப்பதில்தான் துவங்குகிறது." என்கிறார் சீனாவின் தலைவர் மா சே துங்.

பெரிய காப்பியங்கள்  வரிவரியாகத்தான் எழுதப் படுகின்றன. எல்லா சாதனைகளுக்கும்  பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் முக்கியமான நபரின் பெயர் 'சளைக்காத மனம்' என்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com