நீங்கள் வாழ்வில் விரைவாகத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்! 

10 facts you need to know quickly in life!
10 facts you need to know quickly in life!

Intro கொடுத்து உங்கள் மூளையை குழப்ப விரும்பவில்லை. வாருங்கள் நேரடியாக பதிவுக்கு செல்லலாம். 

1. வளர்ச்சி என்பது கற்றல் 1 சதவீதம், செயல் 99 சதவீதம். நாம் அனைவருமே கற்றல் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். ஏனெனில் பலரது மனநிலை, பல விஷயங்களை நாம் கற்றுக் கொண்டால், வாழ்வில் முன்னறிவிவிடலாம் எனத் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மையான வளர்ச்சி நாம் கற்றுக் கொண்டதை செயல்படுத்தும் போதே கிடைக்கிறது. 

2. உங்களை யாரும் விரும்பவில்லை என்பது பொய். உண்மையில் உங்களுக்கு பிறரது தேவைகளை பூர்த்தி செய்யத் தெரியவில்லை என்பதே உண்மை. அதாவது உங்கள் மீது பிறருக்கு ஈர்ப்பு வரவில்லை எனில், நீங்கள் அவர்களுக்கானதை பூர்த்தி செய்யவில்லை என அர்த்தம். 

3. நீங்கள் ஏன் தனிமையாக இருக்கிறீர்கள் என்றால், ஒரு சில விஷயங்களைத் தனியாக தொடங்கத் தயங்குவதால். பல நபர்களுக்கு வாழ்வில் சில முக்கிய விஷயங்களை தனியாகத் தொடங்க தயக்கமாக இருக்கும். அதுவே அவர்கள் தனிமையை அதிகம் உணரக் காரணமாக உள்ளது. உங்களால் தனியாக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றால், ஒருபோதும் உங்களுக்கு தனிமை உணர்வு வராது.

4. நீங்கள் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் வாழ்க்கையில் நீங்கள் எதைத் தேர்வு செய்கிறார்களோ அதுவே கிடைக்கிறது. ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கப் போகிறது. கட்டுப்பாடின்றி கண்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடப் போகிறது. அவ்வளவுதான், நாம் எதைத் தேர்வு செய்கிறோமோ அப்படித்தான் நமது வாழ்க்கையும் அமையும்.

5. நம்மை நாம் கட்டுப்படுத்துவதுதான் கடினம். ஆனால் நம்முடைய சுற்றுப்புறத்தை நாம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உதாரணத்திற்க் ஒரு அறையில், உங்களது உடைகளைக் கழற்றுங்கள் என நான் சொன்னால் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அதுவே உங்களிடம் சொல்லாமல் அந்த அறையின் வெப்பத்தை பன்மடங்கு உயர்த்தினால், நீங்களாகவே தானாக உடையை கழற்றுவீர்கள். இதைப் புரிந்து கொண்டால் பல இடங்களில் நமக்குத் தேவையானதை எளிதாகப் பெற முடியும்.

6. நீங்கள் யாரை குறை கூறுகிறீர்களோ அவர்களே உங்கள் வாழ்வை கண்ட்ரோல் செய்கிறார்கள். உங்களுடைய மோசமான வாழ்விற்கு யாரை நீங்கள் கைகாட்டி குறை கூறுகிறீர்களோ, அவர்களே உங்கள் எண்ணங்களை அதிகம் ஆட்கொண்டு, உங்கள் நிலையை மேலும் மோசமாக்குகிறார்கள். 

7. நல்ல உறவுக்கு மத்தியில் கோபத்திற்கு இடம் இருக்காது. ஒரு உறவு அனைத்தையும் புரிந்து கொண்டு சிறப்பாக இருக்கிறதென்றால், அங்கே துளிகூட கோபம் இருக்காது. 

8. மனக்கசப்பு ஏற்படுவதற்கு உங்களுடைய உண்மையான உணர்வுகளை மறைப்பதே காரணமாகும். மனதில் தோன்றுவதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். அதை அதிகம் மறைக்கும் போதுதான் மனக்கசப்புகள் உண்டாகிறது. 

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷனில் இனி Poll வைக்கலாம்.. மகிழ்ச்சியில் பயனர்கள்! 
10 facts you need to know quickly in life!

9. ஒரு நல்ல உறவென்பது உங்கள் தகுதியை உயர்த்த வேண்டுமே தவிர, உங்களை மோசமான நிலைக்கு கொண்டு போகக்கூடாது. உங்களை ஒருவர் உண்மையிலேயே விரும்புகிறார் என்றால் உங்களது நலனுக்காகவே செயல்படுவார். இதுவே ஒருவர் எல்லா நிலைகளிலும் உங்களை மட்டம் தட்டி மோசமாக உணரச்செய்தால், அது சரியான உறவில்லை என அர்த்தம்.

10. 95% வெற்றி விட்டுக் கொடுக்காத மனநிலையில் இருந்தே வருகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முயற்சித்தால், நிச்சயம் சாதிக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com