10 Signs You Are Mentally Strong.
10 Signs You Are Mentally Strong.

நீங்கள் Mentally Strong என்பதற்கான 10 அறிகுறிகள்!

Published on

எந்த ஒரு திறமை ஒருவரிடம் இருந்தால் அவன் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்? என என்னிடம் யாராவது கேட்டால், மனநிலையை உறுதியாக வைத்துக் கொள்ளும் திறமையைதான் நான் கூறுவேன். அதாவது எல்லா நிலைகளிலும் எவன் ஒருவன் மெண்டலி ஸ்ட்ராங்காக இருக்கிறானோ அவனால் அனைத்தையும் சாதிக்க முடியும். 

இந்த பதிவு வாயிலாக நான் கூறும் 10 அறிகுறிகளை வைத்து நீங்கள் Mentally Strong ஆக இருக்கிறீர்களா எனத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

  1. கடினமான மன உறுதி கொண்டவர்கள், கடந்த காலத்தில் நடந்த மோசமான விஷயங்களை எண்ணி காலத்தை வீணடிக்க மாட்டார்கள். அவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த விஷயங்களை சிறப்பாக மாற்றுவதற்காக போராடுவார்கள்.

  2. இவர்களது எண்ணம் எப்போதும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதை நோக்கியும், புதிய இலக்குகளை நோக்கியுமே இருக்கும்.

  3. உங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து, உண்ணும் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினால், நீங்கள் உறுதியான மனநிலை கொண்டவர் என அர்த்தம். 

  4. இவர்கள் எல்லா விஷயங்களையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அனைத்தையும் சாதாரணமாக கடந்து போகும் மனப்பக்குவம் இவர்களிடம் இருக்கும்.

  5. தான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை என்றால், நடந்த நிகழ்வுகளில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும். 

  6. எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், நிகழ்காலத்தில் நல்ல பழக்கவழக்கங்களிலும், திறமையை வளர்த்துக் கொள்வதிலும் அவர்களது கவனம் இருக்கும்.

  7. மன அழுத்தமான தருணங்களில் அமைதியாக இருப்பார்கள். மன அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.

  8. கோபத்தையும் அதிகம் வெளிப்படுத்த மாட்டார்கள். 

  9. தன்னைப் பற்றி அதிகமாக சிறப்பித்துக் கூறாமல், பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள். 

  10. ஆடம்பரமாய் வாழ்வதற்கான அனைத்தும் இருந்தாலும், சராசரியான வாழ்க்கை முறை இவர்களுக்கு அதிகம் பிடிக்கும். 

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்து எது தெரியுமா?
10 Signs You Are Mentally Strong.

இந்த பத்து அறிகுறிகளும் ஒருவரிடம் இருக்குமேயானால், அவர்கள் உண்மையிலேயே மன உறுதி அதிகம் கொண்டவர்கள் என அர்த்தம். அவர்களால் தங்களை சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். மற்றவர்களைக் காட்டிலும் வாழ்வில் நல்ல உயரத்தை அவர்களால் அடைய முடியும். 

இதில் எத்தனை அறிகுறிகள் உங்களிடம் உள்ளது என கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com