வணிகத் தலைவர்களாக பெண்கள் சிறந்து விளங்க உதவும் 10 உத்திகள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

ல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கோலொச்சிக் கொண்டிருக்கும் காலம் இது.  வணிகத்துறையிலும் பெண்கள் சிறந்த வணிகத் தலைவர்களாக பிரகாசிக்க உதவும் 10 உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. உணர்ச்சி நுண்ணறிவு;

பெண்களுக்கு பெரும்பாலும் உணர்ச்சி நுண்ணறிவு அதிகம். அவர்கள் தங்கள் ஊழியர்களை புரிந்து கொள்ளவும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ளவும் இது உதவுகிறது. அவர்களை அரவணைத்து வேலை வாங்கும் திறமையும் இருக்கிறது. சிறந்த குழு ஒருங்கிணைப்பு மற்றும்  சிக்கல்களை தீர்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால்  நல்ல உற்பத்தி சூழலை உருவாக்க முடியும்.

2. கூட்டுத் தலைமை;

பெண்கள் கூட்டுத் தலைமைத்துவ பாணியை திறம்பட செய்வதில் வல்லவர்கள். குழுப்பணியை ஊக்குவிப்பது புதுமையான பயனுள்ள தீர்வுகளுக்கு வழிவகுக்கும். முடிவெடுப்பதில் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை புகுத்துவதன் மூலம் கூட்டு சிக்கலை எளிதாக அவர்களால் தீர்க்க முடியும்.

3. தொடர்புத் திறன்;

வலுவான வாய்மொழி மற்றும் பிறருடைய கருத்துக்களை பொறுமையாக கேட்பது போன்ற திறன்கள் பங்குதாரர்களுடன் வலுவான அக்ரீமெண்ட்டை உருவாக்க உதவுகிறது. மேலும் அர்ப்பணிப்பு கொண்ட பணியாளர்களை உருவாக்கவும் உதவுகிறது.

4. சவால்களை சமாளித்தல்;

வணிகத்தை திறம்பட வழிநடத்துவதற்கு, தடைகளை கடப்பதற்கும் சவால்களை சமாளிப்பதும் முக்கியமான செயல்கள். பெண்கள் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களின் திறன் மற்றும் தேவைக்கேற்ற உத்திகளை பயன்படுத்தி வணிகத்தில் வெற்றியை காணலாம்.

5. நுண்ணிய விவரங்கள்;

நுணுக்கமான விவரங்களை சேகரிப்பதும், திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பரிசீலிப்பதும்,  குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதையும் உறுதி செய்து கொண்டால் வணிகத்திற்கு மிக உதவியாக இருக்கும். வணிக நடவடிக்கைகளில் தரம் மற்றும் நிலைத்தன்மையின் தரங்களை பராமரிக்க இது உதவுகிறது.

6. திட்டமிடல்;

நீண்டகால திட்டங்களில் கவனம் செலுத்தி நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் வெற்றியை அவர்கள் உறுதி செய்ய முடியும். அதேபோல இடர் மேலாண்மையும் மிக முக்கியம். வணிகத்துறையில் இருக்கும் சாத்தியமான ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.

7. வேலை வாழ்க்கை, சமநிலை;

பெண் தலைவர்கள், வேலையையும் தங்கள் சொந்த வாழ்க்கையையும் சமநிலையாக பாவிக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் நல்வாழ்வு மற்றும் உற்பத்தி திறனுக்கான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமநிலையை தாங்களே பயிற்சி செய்வதன் மூலம் தங்கள் குழுக்களுக்கும் அதனை ஊக்குவிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மைசூர் சில்க்கும் மோட்டிவேஷனும்..!
Motivation article

8. நேர்மை;

பெண் தலைவர்கள் பெரும்பாலும் நெறிமுறை நடத்தை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பார்கள். தங்களின் நேர்மையான நடத்தை மூலம் நிறுவனத்திற்குள் மட்டுமல்ல, வெளி பங்குதாரர்களுடன் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறார்கள். இதனால் நிறுவனத்தின் நற்பெயரையும் காப்பாற்றுவார்கள்.

9. படைப்பாற்றல்;

பெண் தலைவர்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய யோசனைகளை வரவேற்று அவற்றை ஆராய்ந்து செயல்பட வேண்டும் மாறுபட்ட கண்ணோட்டங்களை வரவேற்க வேண்டும்.

10. நெட்வொர்க்கிங் மற்றும் உறவுகளை உருவாக்குதல்;

பெண்கள் நெட்வொர்க்கிங் மற்றும் வலுவான தொழில்முறை உறவுகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார்கள், இது வணிகத்திற்கான புதிய வாய்ப்புகளையும் கூட்டமைப்புகளையும் ஏற்படுத்தும். வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு நெட்வொர்க்குகளை வளர்ப்பதன் மூலம், பெண்கள் நிறுவனத்திற்குள் தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாட்டு கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.

இது போன்ற உத்திகளை பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட சிறந்த வணிகத் தலைவர்களாக மிளிர முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com