சாதனைப் பாதையில் நீங்கள் சந்திக்கும் 10 விஷயங்கள்!

Road of success
Road of success

ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்றால் சில பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயமே. உங்களிடம் இதனைப் பற்றி பலர் கூறியிருப்பார்கள். சூழ்நிலை பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், வெளியிலிருந்து வரும் பிரச்சனைகள், உங்களைப் பிடிக்காதவர்கள் செய்யும் பிரச்சனைகள் என அதிகம் உள்ளன. பிரச்சனைகளை மட்டும் அல்ல அந்த பாதையின் முழு வடிவங்களையும் நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

1.யோசனை:

எந்த இலக்கிற்கும் முதல் படி யோசனைத்தான். இந்த முதல் படியில் தெளிவாக இருந்தால் மட்டுமே நம்மால் தன்னம்பிக்கையுடன் அடுத்த படிக்கு செல்ல முடியும். அந்த இலக்கிற்கான மற்றும் இலக்கைப் பற்றியான அனைத்து யோசனைகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.

2. திட்டம்:

அந்த யோசனைகளை ஒன்றாக்கி சரியான திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இரண்டாவது படியை எளிதாகக் கடக்க முடியும். திட்டம் செய்வது கடினமாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு செல்லும்போது தடுமாற்றம் இல்லாமல் செல்ல முடியும்.

3. கற்றல்:

செய்து வைத்த திட்டங்களைக் குறித்து Case study செய்ய வேண்டும். அதாவது அந்த திட்டங்களைக் குறித்த அனைத்து விதமான விஷயங்களையும் சேகரித்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4. நேர்மறை எண்ணங்கள்:

உடன் இருப்பவர்கள் என்னத்தான் உங்களை குறைவாக கூறினாலும் அனைத்து முயற்சிகளிலும் மட்டம் தட்டினாலும் நீங்கள் நேர்மறையாகவே இருக்க வேண்டும்.

5. தடங்கல்:

இந்த தடங்கள் நீங்கள் செய்து வைத்த திட்டங்களில், குடும்ப விஷயங்களில் அல்லது சூழ்நிலை பிரச்சனைகளில் இருக்கலாம். நீங்கள் அதை கடந்து வருவது மட்டுமே ஒரே வழியாகும்.

6. பிரச்சனை :

தொடர்ந்து பிரச்சனைகள் வருவது இந்த பாதையில் வழக்கம்தான். அது எந்தமாதிரியான பிரச்சனைகளாகவும் இருக்கலாம். அப்போது நீங்கள் இதனைத் திரும்பி செல்ல முடியாத ஒரு வழிப் பாதையாக கருதினால் மட்டுமே முன்னேற முடியும்.

7. சோகம்:

திடீரென்று காரணம் அறியாத சோகம் உங்களைத் தாக்கும். அப்போது எந்த வேலைகளையும் நிம்மதியாக செய்ய முடியாது. அப்போதெல்லாம் நீங்கள் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதைத் தான் சிந்திக்க வேண்டும். அல்லது ஓரிரு நாட்கள் எதைப் பற்றியும் நினைக்காமல் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

8. சுய சந்தேகம்:

நீங்கள் செய்த வேலைகள், வந்த வழி, செய்த திட்டங்கள் ஆகியவை சரியானதுதானா என்ற சந்தேகமும் இந்த முயற்சி நல்ல விளைவைத் தருமா என்ற சந்தேகமும் உங்களை ஆட்கொள்ளும். அப்போது எதையும் நினைக்காத அளவிற்கு நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அன்பு எனும் கலை சொல்லும் பாடம் என்ன?
Road of success

9. சிறிய சாதனை:

உங்கள் முயற்சிகளுக்கு ஒரு சிறிய பாராட்டோ அல்லது இந்த முயற்சி வெற்றிபெரும் என்ற வார்த்தைகளோதான் உங்களின் சிறிய சாதனையில் வரும்.

10. சாதனை:

இவையனைத்திற்கும் பிறகுத்தான் சாதனை. இந்த கடைசி படியை அடைய நாம் இத்தனை விஷயங்களைக் கடந்துத்தான் வர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com