வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் வெற்றி தோல்விகள் மற்றும் பல புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கும் பயணமாகும். இந்த சவால் நிறைந்த பயணத்தில் மக்கள் தவறுகள் செய்வது இயற்கையானது. இந்தப் பதிவில் மக்கள் தங்களது வாழ்நாளில் செய்யும் 12 பொதுவான தவறுகள் என்னவென்பதைக் கொஞ்சம் ஆராய்வோம்.
தோல்வி பயம்: மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் முதன்மையாக தோல்வி பயத்தை சொல்லலாம். இது அவர்களது வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி கனவுகளைப் பின்தொடர்வதில் இருந்து தடுக்கிறது.
தன்னம்பிக்கை இல்லாமை: பலர் தங்களது திறமைகளை தானே குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைத்து வளர்ச்சியைத் தடுக்கிறது. தன் மீது நம்பிக்கை வைத்தால் இலக்குகளை எளிதாக அடைய முடியும்.
கடந்த காலத்தில் வாழ்வது: கடந்த கால தவறுகள், வருத்தங்கள் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து அவ்வப்போது சிந்திப்பது தனிப்பட்ட முன்னேற்றத்தைத் தடுக்கலாம். கடந்த காலத்தில் வாழும் நபர்கள் நிகழ்காலத்தை முழுமையாக தவறவிட்டு முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றனர்.
தள்ளிப்போடுதல்: தள்ளிப் போடுதல் என்பது ஒருவரின் உற்பத்தித்திறனைக் குறைக்கும் பொதுவான தவறாகும். ஒருவரின் முக்கிய பணிகள் அல்லது முடிவுகளை தாமதப்படுத்துவதால், அவர்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இதனால் மன அழுத்தம் அதிகரித்து வாழ்க்கையில் பல பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
இலக்குகள் இல்லாமை: வாழ்க்கையில் தெளிவான இலக்குகள் இல்லாமல் இருப்பது, தனி நபர்களை எப்படி வாழப் போகிறோம் என்ற உந்துதல் இல்லாமல் இருக்கச் செய்கிறது. எனவே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் முக்கியம்.
சுய கவனிப்பு இல்லாமை: அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளுக்கு மத்தியில் ஒருவரின் உடல், மனம் மற்றும் உணர்ச்சியை கவனித்துக் கொள்வது முக்கியமாகும். சுய கவனிப்பை புறக்கணிப்பதால் உற்பத்தித்திறன் குறைந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். எனவே முறையாக உடற்பயிற்சி, உறவுகளை வளர்ப்பது, ஆரோக்கியமான உணவு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுங்கள்.
பிறருக்காகவே வாழ்வது: தொடர்ச்சியாக பிறர் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பிறர் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முயற்சிப்பது உங்களது தனிப்பட்ட மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். மேலும் மற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க முடியாது.
நிதித் திட்டமிடல் இல்லாமை: நிதியை திறம்பட திட்டமிட்டு நிர்வகிக்கத் தவறினால் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனவே எதிர்காலத்திற்கான நிதித் தேவையை கருத்தில் கொண்டு பட்ஜெட்டை உருவாக்கி பணத்தை பராமரிப்பது புத்திசாலித்தனமானது.
மாற்றத்தை விரும்பாதது: வாழ்க்கையில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அதை எதிர்ப்பதால் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தடைபடுகிறது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதால், நீங்கள் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
மோசமான கம்யூனிகேஷன்: ஆரோக்கியமான உறவுகளுக்கு முறையான கம்யூனிகேஷன் அடித்தளமாக அமைகிறது. எனவே உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசுங்கள். பிறர் பேசவில்லை என்றாலும் நீங்கள் அதற்கான முன்முயற்சியை எடுங்கள்.
ஒப்பீடு மற்றும் பொறாமை: தன்னை பிறரிடம் ஒப்பிடுவது மற்றும் பிறரது உடமைகள் மீது பொறாமை கொள்வது உங்களது மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். எனவே உங்களது தனித்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து, உங்களுக்கான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
உணர்வுகளைப் புறக்கணித்தல்: பலர் தங்களது தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளை விட வேலை, பொறுப்புகள் மற்றும் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இப்படி தனிப்பட்ட உணர்வுகளை புறக்கணிக்கும்போது வாழ்க்கையில் திருப்தி மற்றும் மகிழ்ச்சி இல்லாமல் போகிறது.