12 Life Lessons to Make You Feel Better!
12 Life Lessons to Make You Feel Better!

உங்களை சிறப்பாக உணர்வைக்கும் 12 வாழ்க்கைப் பாடங்கள்!

Published on

நாம் அனைவருமே வாழ்க்கை பற்றிய சில பாடங்களை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அத்தகைய பாடங்கள் நாம் நம்முடைய வாழ்வை சிறப்பாக நகர்த்திக் கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது. அப்படி உங்கள் வாழ்க்கைக்கு உதவும் சில பாடங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

  1. நம் வாழ்வில் அனைவருமே மாறக் கூடியவர்கள்தான். இதில் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தும் ஒரே விஷயம், நீங்கள் மாறுவதற்கு எவ்வளவு நேரமும், முயற்சியும் தேவைப்படுகிறது என்பதே. 

  2. வாழ்க்கையில் எல்லாம் சரியாகவே இருக்கும் என சொல்ல முடியாது. நீங்கள் விரும்பும் விஷயம் விரும்பியபடி நடக்காதபோது, அதை எப்படி சமாளிக்க வேண்டும் எனக் கற்றுக் கொள்ளுங்கள். 

  3. உங்களது பலவீனத்தையும், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் ரகசியமாகவே வைத்திருங்கள். ஏனெனில் இவற்றை உங்களுக்கு எதிராக யார் பயன்படுத்துவார்கள் என்பது உங்களுக்கே தெரியாது.

  4. எப்போதும் பணிவாகவும், மரியாதையுடனும் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதை செய்வது மிகவும் எளிதுதான். பல தருணங்களில், பல பிரச்சினைகளில் இருந்து இது உங்களைக் காப்பாற்றும்.‌

  5. நம்மைச் சுற்றியுள்ள அனைவருமே சுயநலவாதிகள்தான். மக்கள் எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக, நீங்கள் விரும்பியபடி இருப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.

  6. நீங்கள் விரும்பியவர் உங்களை எப்போது வேண்டுமானாலும் விட்டுச் செல்லலாம். எனவே அனைத்திற்கும் தயாராக இருங்கள்.

  7. எல்லா தருணங்களிலும் உங்கள் பெற்றோர் உங்களுடனே இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை நீங்கள் தனியாகத்தான் செய்ய வேண்டும். 

  8. நீங்கள் திட்டமிட்டபடி வாழ்க்கை செல்லவில்லை என்றால், அது நல்லதுதான்.

  9. உங்களால் எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது. எனவே யாருக்காகவும் எதற்காகவும் உங்களுடைய சுயத்தை இழந்து விடாதீர்கள். 

  10. வாழ்க்கையில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை. நீங்கள் இதுவரை தோல்வியே அடையவில்லை என்றால், வாழ்க்கையில் எதையும் முழுமையாக முயற்சிக்கவில்லை என அர்த்தம். 

  11. உங்களை விரும்பும், உங்கள் மீது அக்கறை உள்ள ஒருவருக்கு எப்போதும் உறுதுணையாக இருங்கள். 

  12. வாழ்க்கை நீங்கள் நினைக்கும் அளவுக்கு கடினமானது அல்ல. அது மிகவும் எளிமையானது. உங்கள் மூளைதான் அதைக் கடினமானதாக சித்தரிக்கிறது. 

logo
Kalki Online
kalkionline.com