உங்களை ஆச்சரியப்பட வைக்கும் 12 உளவியல் உண்மைகள்! 

Psychology
12 Psychological Facts That Will Blow Your Mind.
Published on

உளவியல் என்பது மனிதர்களின் தன்மைகளை ஆராயும் ஒரு சிறப்புமிக்க துறையாகும். நமது உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகள் பற்றி தெரிந்து கொள்வது எப்போதுமே சுவாரசியமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தப் பதிவில் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் உளவியல் உண்மைகளைப் பற்றி பார்க்க போகிறோம். 

1. The Power of Colour: நிறங்கள் நம் மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணத்திற்கு சிவப்பு நிறமானது இதயத்துடிப்புடன் தொடர்புடையது. அதே நேரம் நீல நிறமானது நமக்கு அமைதியைக் கொடுக்கும். 

2. The Primacy Effect: நமக்குக் கிடைக்கும் எல்லா தகவல்களையும் விட முதலில் கிடைக்கும் தகவலை நம் மூளையானது நன்றாக நினைவில் வைத்திருக்கும். அதனால்தான் First Impression is the best Impression என்பார்கள். 

3. The Placebo Effect: சில நேரங்களில் போலியான சிகிச்சை கூட உங்களது நோயை குணப்படுத்தலாம். அதாவது ஒரு சிகிச்சை செயல்முறையை நீங்கள் ஆழமாக நம்பும்போது அதன் மூலமாக உங்களது நோய் குணமடையும். 

4. The Mere-exposure Effect: நாம் அடிக்கடி வெளிப்படும் விஷயங்கள் அல்லது நபர்களை நமக்கு பிடிக்க ஆரம்பித்துவிடும் என்கிறது இந்த உளவியல் விளைவு. 

5. The Bystander Effect: உதவி தேவைப்படும் சூழலில் அருகே அதிக நபர்கள் இருக்கும்போது, உண்மையில் உதவி தேவைப்படும் நபருக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. அதிக நபர்கள் இருந்தால் வேறு யாராவது உதவுவார்கள் என்ற மனநிலையில் யாருமே உதவ முன்வருவதில்லை. 

6. The Power of Persuasion: மக்கள் அவர்கள் விரும்பும் மற்றும் அதிகமாக நம்பும் ஒருவரால் அதிகமாக வற்புறுத்தப்பட வாய்ப்புள்ளது. 

7. The Zeigarnik Effect: முடிக்கப்படாத வேலைகள் நம் மனதில் தங்கி பதற்றத்தை உருவாக்குகின்றன. இதனாலேயே முடிக்க வேண்டிய விஷயங்களை விட, முடிக்கப்படாத விஷயங்களை செய்வதற்கு நாம் பட்டியல்களை அடிக்கடி போடுகிறோம். 

8. The Halo Effect: ஒரு நபரின் தனிப்பட்ட பண்புகளின் அடிப்படையில் ஒருவரின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் நாம் அனுமானம் செய்ய முயல்கிறோம். 

9. The Framing Effect: நமக்குக் கிடைக்கும் தகவலின் விதமானது நமது முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

10. The Self-Fulfilling Prophecy: ஒரு சூழ்நிலையைப் பற்றிய நமது எதிர்பார்ப்புகள் நமது நடத்தைகளை முற்றிலுமாக பாதிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
Intelligence Quotient என்றால் என்ன? அதை எப்படி மதிப்பிடுகிறார்கள் தெரியுமா?
Psychology

11. The Von Restorff Effect: நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் ஏதேனும் ஒன்று தனித்து நிற்கும் போது அதை நாம் அதிகமாக நினைவில் வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். 

12. The Flynn Effect: காலப்போக்கில் மனிதர்களின் IQ மதிப்பெண்கள் தலைமுறை தலைமுறையாக அதிகரித்து வருகின்றன. 

இந்த உளவியல் உண்மைகள் மூலமாக மனித நடத்தைகள் பற்றி முழுமையாக நாம் தெரிந்துகொள்ள முடியும். இவற்றை வைத்து பார்க்கும் போது, உளவியல் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கும் துறையாகவே தெரிகிறது. இது மனித செயல்பாடுகளின் மர்மங்களை தொடர்ந்து அவிழ்த்து வருகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com