இந்த 14 விஷயங்கள் பணத்தைத் தாண்டி உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும்!

14 Things Will Bring You Value Beyond Money.
14 Things Will Bring You Value Beyond Money.
Published on

பணம் இருந்தால் உங்களை அனைவரும் சிறப்பாக பார்ப்பார்கள் என பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பணத்தை மீறிய சிலவற்றாலும் நமக்கு மதிப்புகள் கிடைக்கும். மனிதர்களாகிய நமக்கு மூன்று காரணங்களுக்காக மட்டுமே பணம் தேவைப்படுகிறது. நமது கஷ்டத்தை போக்க, சில தருணங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க மற்றும் பிறருடைய மதிப்பை சம்பாதிக்க. பணம் இல்லை என்றாலும் இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 14 விஷயங்கள் உங்களிடம் இருந்தால், அனைவருக்கும் நீங்கள் சிறப்பு மிக்க நபராகத் தெரிவீர்கள்.

  1. அழகான துணை: உங்களுடைய துணை எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதை வைத்தும் உங்களை இந்த சமூகம் சிறப்பாக பார்க்கும் என சொல்லப்படுகிறது. உங்களிடம் பணம் இல்லை என்றாலும் அழகான துணை இருந்தால் உங்களை பார்த்து அனைவரும் பொறாமைப் படுவார்கள்.

  2. சமூக ஆதிக்கம்: பிறரிடம் பேசும்போது அல்லது ஒரு சபையில் பேசும்போது தனது ஆதிக்கத்தை செலுத்தி தைரியமாக பேசும் நபர்களை அனைவருக்குமே பிடிக்குமாம். 

  3. சுய சிந்தனை: யார் ஒருவன் சுயமாக சிந்தித்து அவனுக்கான முடிவுகளை எடுக்கிறானோ, அவன் பிறருக்கு சிறந்த நபராகத் தெரிகிறான். 

  4. சமைத்தல்: பெரும்பாலும் ஆண்கள் சமைப்பதை தரக்குறைவாகப் பார்க்கின்றனர். ஆனால் சமைக்கும் ஆண்களை உண்மையிலேயே அனைவருக்கும் பிடிக்கும். இது உங்கள் மீதான பார்வையை பிறருக்கு உயர்த்திக் காண்பிக்கும்.

  5. இரண்டு மொழிகளுக்கு மேல் பேசுதல்: அதிகமான மொழிகளைப் பேசுபவர்களை அறிவாளி என நினைக்கும் சமூகம் நம்முடையது. எனவே நீங்களும் அதிக மொழிகளை பேசி உங்களை சிறப்பான நபராகத் தெரியப்படுத்துங்கள்.

  6. சொந்தமாக புத்தகம் வெளியிடுதல்: புத்தகம் எழுதுதல் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. எனவே புத்தகம் எழுதி அதை வெளியிடும் நபர்களை இவ்வுலகம் கௌரவமான இடத்தில் வைத்துப் பார்க்கிறது.

  7. அனைவரிடமும் சகஜமாக பழகுதல்: அனைவரிடமும் சகஜமாகப் பழகுவது என்பது எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் எல்லா நபர்களிடமும் ஒரே மாதிரி பழகும் குணமாகும். இது அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.

  8. தனக்கானதை தானாகவே செய்து கொள்ளுதல்: இன்றைய நவீன உலகில் எல்லா விஷயங்களையும் செய்வதற்கு செயலிகளும், சாதனங்களும் வந்துவிட்டது. இருப்பினும் உங்களுக்கான வேலையை நீங்களே செய்து கொள்ளும்போது, சிறப்பான நபராகப் பார்க்கப்படுவீர்கள்.

  9. நல்ல உடலமைப்பு: ஒருவன் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும், அவன் உடலமைப்பு கட்டுக்கோப்பாக இருந்தால், அவனுக்கான மரியாதை தானாகக் கிடைக்கும். 

  10. கலை, வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதல்: புத்திசாலிகளை என்றுமே மக்கள் விரும்புவர். எனவே எல்லா விஷயங்களிலும் சிறந்து விளங்குபவர்கள், என்றுமே மக்களுக்கு ஈர்ப்பானவர்களே.

  11. எதையும் எதிர்பாராமல் உதவுவது: எதையும் எதிர்பாராமல் உதவும் ஒருவரை எப்படி சிறப்பாகப் பார்க்காமல் இருக்க முடியும்.

  12. பிறருக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுதல்: உதாரணத்திற்கு நீங்கள் வெளியே ஒருவருடன் செல்கிறீர்கள் என்றால், அதிக கேள்விகள் கேட்காமல் அவர்களுக்கு ஏற்றபடி நீங்கள் நடந்து கொண்டாலே உங்கள் மீது விருப்பம் ஏற்படும்.

  13. செய்வதை சொல்லும்போது: யார் ஒருவன் தான் சொல்வதை செய்து காட்டுகிறானோ, அவனை அனைவருக்குமே பிடிக்கும்.

  14. மகிழ்ச்சியான குடும்பம்: பணம் பொருள் இவை அனைத்தையும் விட, மகிழ்ச்சியான குடும்பம் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கிறது. இத்தகைய மகிழ்ச்சியான குடும்பத்தில் இருப்பவர்களும் பிறரால் அதிகம் விரும்பப்படுகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com