கி.மு 470 முதல் கி.மு 399 காலத்தில் வாழ்ந்த சாக்ரடீஸ் தனதுத் தத்துவங்களால் மக்களின் மூடநம்பிக்கைகளை வேருடன் அகற்ற முயன்றார். இவர் தனது கேள்விகளால் அனைவரையும் சிந்திக்க வைத்தார். இப்பொழுதும் கூட உலகம் முழுவதுமுள்ள மக்கள் இவரின் தத்துவங்களைப் படித்து சிறந்த சிந்தனையாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
அந்தவகையில் சாக்ரடீஸின் 15 சிறந்த தத்துவங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
2. உங்களை நீங்களே அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
3. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானமாகும்.
4. வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.
5. எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
6. சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.
7. உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.
8. ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை மதிப்புமிக்க வாழ்க்கையல்ல.
9. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றப்படி செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றப்படி உன் வாழ்க்கை அமையும்.
10. நாம் எதை இழந்துவிட்டாலும் இழக்காவிட்டாலும் கௌரவத்தை மட்டும் இழக்கக்கூடாது. இழக்க இடமும் தரக்கூடாது.
11. அன்போடு கேட்க வேண்டும். புத்திசாலித்தனத்தோடு பதில் சொல்ல வேண்டும். நிதானத்துடன் யோசிக்க வேண்டும். பாரபட்சம் இன்றித் தீர்ப்பு வழங்க வேண்டும்.
12. புரிந்துக்கொள்ளாத போதும் பொறாமைப்படும் போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதிவிடுகிறான்.
13. எதையும் உன் சொந்த அறிவு கொண்டு சிந்தி. எதையும் அப்படியே நம்பி விடாதே. ஏன்? ஏதற்கு? எதனால்? என்று கேள்விகளைக் கேள்.
14. காலம்: நீ பயந்தாலும் ஓடும். பணிந்தாலும் ஓடும். துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடி வரும்.
15. கட்டளையிட விரும்புபவர் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தப் பதினைந்துத் தத்துவங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சிறந்த மற்றும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.