இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் இன்று. 1861ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த இவர், ஆகஸ்ட் 7ம் தேதி 1941ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் உலகை விட்டு பிரிந்து எவ்வளவு காலங்கள் ஆனாலும், இன்றும் இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தவராகவே இருந்து வருகிறார். அந்தவகையில், அவர் கூறிய 16 பொன்மொழிகள் பற்றி பார்ப்போம்.
1. ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலகம் வலி நிறைந்தது என்பது அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.
2. ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை.
3. நட்சத்திரங்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல தோற்றமளிக்க பயப்படுவதில்லை.
4. உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும்.
5. விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை.
6. முள் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும்.
7. இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்.
8. மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.
9. வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.
10. தான் நடும் மரங்களின் நிழலில் தான் ஒருபோதும் உட்கார மாட்டார் என்று தெரிந்தும் மரங்களை நடுபவர், குறைந்தபட்சம் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.
11. கடவுளின் பாதத்தில் பூக்களை வைக்க கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் உங்கள் சொந்த வீட்டை அன்பின் வாசனையால் நிரப்புங்கள், கடவுள் முன் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் உங்கள் இதயத்திலிருந்து பாவ இருளை அகற்றுங்கள். தலை குனிந்து பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் சக மனிதர்கள் முன் பணிவாக தலை வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
12. அழகு என்பது ஒரு சரியான கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது ஏற்படும் உண்மையின் புன்னகை. அன்பு தன்னை அலங்கரிக்கிறது; அது வெளிப்புற அழகின் மூலம் உள் மகிழ்ச்சியை நிரூபிக்க முயல்கிறது.
13. குழம்பிற்காக மிளகாய்பொடி எப்படி அவசியமோ, அப்படி காதல் வகையிலும் சற்று கோபதாபம் அவசியம் இருக்க வேண்டும். இல்லாவிடில் அது ரசிக்காது.
14. முயற்சி என்பது இதயத்திற்குள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல, ஆற்றலை கிளப்பம் ஒரு தூண்டுகோல் அது.
15. எல்லோரும் தம்மை விட்டு வேறு யாரையோ சீர் திருத்த முயல்கிறார்கள்.
16. ஒரு மலரையோ, ஒரு பட்டு பூச்சியையோ, அதன் தோற்றத்தை கொண்டு மதிப்பிட்டுவிடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது.