படிக்கவே போர் அடிக்குதா? உங்க வாழ்க்கையையே மாத்தப்போற 20 பொன்மொழிகள் இதோ!

20 students Motivational Quotes
20 students Motivational Quotes
Published on

காலை அலாரம் அடிக்கும்போது, "ஐயோ, இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கலாமே" என்று தோன்றும். புத்தகத்தை எடுத்தால், "இந்த சிலபஸ் மலையளவு இருக்கே, எப்போ படிச்சு முடிக்கப்போறோம்?" என்ற மலைப்பு வரும். தேர்வை நினைத்தாலே ஒருவித பதற்றம் வயிற்றில் உருளும். அன்பு மாணவர்களே, இதெல்லாம் உங்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சனை இல்லை; உலகத்தில் சாதித்த அத்தனை பேரும் இந்த மனநிலையைக் கடந்து வந்தவர்கள்தான். 

சில நேரங்களில், ஒரு வண்டிக்கு எப்படி பெட்ரோல் தேவையோ, அதேபோல நம் மனதுக்கும் ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற வெற்றியாளர்கள் தங்கள் அனுபவத்தில் சொன்ன வார்த்தைகள், வெறும் எழுத்துக்கள் அல்ல; அவை நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள். வாருங்கள், உங்கள் சோர்வை விரட்டி, உங்களுக்குள் இருக்கும் வெற்றியாளனைத் தட்டியெழுப்பும் சில அற்புதமான பொன்மொழிளைப் பார்ப்போம்.

  1. "The only way to do great work is to love what you do." சிறந்த வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்.

  2. "Believe you can and you're halfway there." உங்களால் முடியும் என்று நம்புங்கள், அப்போதே நீங்கள் பாதி தூரத்தைக் கடந்துவிட்டீர்கள்.

  3. "Success is not final, failure is not fatal: It is the courage to continue that counts." வெற்றி என்பது இறுதியல்ல, தோல்வி என்பது முடிவல்ல; தொடர்ந்து முயற்சிக்கும் துணிவே முக்கியம்.

  4. "The future belongs to those who believe in the beauty of their dreams." தங்கள் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்.

  5. "Don't watch the clock; do what it does. Keep going." கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்; அது செய்வதைச் செய்யுங்கள். ஓடிக்கொண்டே இருங்கள்.

  6. "Hard work beats talent when talent doesn't work hard." திறமைசாலி கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு அந்தத் திறமையை வென்றுவிடும்.

  7. "Education is the most powerful weapon which you can use to change the world." உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

  8. "It always seems impossible until it's done." ஒரு காரியத்தை முடிக்கும் வரை, அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.

  9. "Dream is not that which you see while sleeping, it is something that does not let you sleep." கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு.

  10. "You are never too old to set another goal or to dream a new dream." புதிய இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவை காணவோ வயது ஒரு தடையல்ல.

  11. "Opportunities don't happen. You create them." வாய்ப்புகள் தானாக அமைவதில்லை. அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

  12. "Mistakes are proof that you are trying." தவறுகள் என்பவை நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கான சான்றுகள்.

  13. "The expert in anything was once a beginner." எந்த ஒரு துறையில் வல்லுநராக இருப்பவரும், ஒரு காலத்தில் அந்தத் துறையில் புதிதாகக் கற்றுக்கொள்பவரே.

  14. "Your time is limited, so don't waste it living someone else's life." உங்கள் நேரம் குறைவானது, எனவே அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்.

  15. "Success usually comes to those who are too busy to be looking for it." வெற்றியைத் தேடுவதற்குக் கூட நேரமில்லாமல் உழைப்பவர்களுக்கே, வெற்றி தானாக வந்து சேரும்.

  16. "Don't let yesterday take up too much of today." நேற்றைய கவலைகள் இன்றைய பொழுதை அதிகம் ஆக்கிரமிக்க விடாதீர்கள்.

  17. "A journey of a thousand miles begins with a single step." ஆயிரம் மைல் பயணம் கூட, எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் தொடங்குகிறது.

  18. "If you can dream it, you can do it." உங்களால் கனவு காண முடியுமென்றால், அதைச் செய்யவும் முடியும்.

  19. "Action is the foundational key to all success." அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படைத் திறவுகோல் செயல்தான்.

  20. "Be the change that you wish to see in the world." இந்த உலகத்தில் நீங்கள் என்ன மாற்றத்தை விரும்புகிறீர்களோ, அந்த மாற்றமாக நீங்களே இருங்கள்.

இதையும் படியுங்கள்:
காலம் பொன் போன்றது: நேரத்தை எப்படி வீணாக்காமல் பாதுகாப்பது?
20 students Motivational Quotes

இந்தப் பொன்மொழிகள் எல்லாம் ஒரு வரைபடம் மாதிரிதான். வரைபடம் கையில் இருந்தால் மட்டும் போதாது, நாம் எழுந்து நடந்தால்தான் ஊர் போய்ச் சேர முடியும். இந்த வரிகளை உங்கள் ஸ்டடி டேபிளில் ஒட்டி வையுங்கள். எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் இதைப் படியுங்கள். பிறகு நடப்பது என்னவென்று நீங்களே பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com