இந்த 3 காரணங்களால்தான் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ முடியவில்லை!

 3 reasons are why you can't live the life you want.
3 reasons are why you can't live the life you want.
Published on

சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து, "அந்த நபர் அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார். ஆனால் நான் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறேன்" என நினைத்துள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் இன்னும் உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழவில்லை என அர்த்தம். 

உலகில் நமக்கு பல வாய்ப்புகள் இருப்பது போல் உணர்கிறோம். நல்ல வேலை கிடைக்கும், ஒரு நல்ல தொழில் தொடங்கலாம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஏனோ அவற்றை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் வெறுக்கும் வேலையை செய்துகொண்டு, என்றாவது ஒருநாள் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்துக் கொண்டே காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் வெற்றி பெறாமல் இருப்பதற்கு இவை மூன்றும்தான் காரணமாக இருக்கும்.

தீர்மானமின்மை

நீங்கள் விரும்பியபடி உங்கள் வாழ்க்கையும் தொழிலும் அமையவில்லை என்றால், உங்கள் அணுகுமுறையில் ஏதோ ஒரு தவறு உள்ளதென்று அர்த்தம். அதில் கட்டாயம் ஏதாவது மாற்றம் தேவை. இதைக் கேட்பதற்கு எளிமையாகத் தெரியும் ஆனால் இது மிக முக்கியமானது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் அதை எளிமையாக வைத்திருக்க வேண்டும். சிக்கலான வாழ்க்கையில் இருந்துகொண்டு எதையுமே சாதிக்க முடியாது. 

நீங்கள் உங்கள் கனவு வாழ்க்கையை வாழ விரும்பினால், அதற்காக பல வித்தியாசமான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக எந்த ஒரு முடிவை எடுப்பதிலும் தீர்க்கமாக செயல்பட வேண்டும். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொண்டு, ஆழமான அசைக்க முடியாத தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கு செல்லபோகிறோம் என்பதே தெரியாமல் பயணித்தால் காணாமல் தான் போவோம்.

நம்பிக்கைகளை கட்டுப்படுத்துதல்

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னாலும் பல வரம்புகளுக்கு உட்பட்டு நமது நம்பிக்கைகளை அகற்றிவிடுகிறோம். அதாவது "எனக்கு போதுமான திறமை இல்லை, என்னிடம் பணம் இல்லை, இளைய வயதில் இதையெல்லாம் செய்யக்கூடாது, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது, எனக்கு நேரமில்லை" போன்ற விஷயங்களை கூறிக்கொண்டு, நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தள்ளிப் போடுகிறோம். முதலில் இதுபோன்று நினைத்து உங்கள் வேலைகளை ஒதுக்குவதை நிறுத்துங்கள். சுற்றி இருக்கும் விஷயங்கள் ஒருபோதும் உங்களை கட்டுப்படுத்த விடாதீர்கள். எப்போது வேண்டுமானாலும் நமக்கு பிடித்தபடி நம் வாழ்க்கையை நம்மால் வாழவும், மாற்றவும் முடியும். 

விஷயங்களை மிகப் பெரியதாக நினைத்துக் கொண்டு அதிக நேரம் எடுத்துக்கொள்வது. 

ருவர் உடற்பயிற்சி செய்து உடலுக்கு நல்ல தோற்றத்தை கொண்டு வர விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். தொடக்கத்தில் மிக உற்சாகமாக உடற்பயிற்சி செய்வார். உணவு கட்டுப்பாடு, காலையில் சீக்கிரம் எழுவது, புத்துணர்ச்சியாக உணர்வது போன்ற விஷயங்கள் நன்றாக இருக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து அதே பழைய ஆரோக்கியமற்ற பழக்கத்திற்கு மீண்டும் சென்று விடுவார்கள். இதை பல சமயங்களில் நீங்கள் கவனத்திருப்பீர்கள். ஏனென்றால் ஒரு செயலை செய்யத் தொடங்கிய ஒரு கட்டத்திற்குப் பிறகு, இந்த இலக்கை எட்டுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என அவர்கள் நினைப்பதுதான் காரணமாகும். 

இதுபோன்று வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் இதைச் செய்ய நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் எனத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டு நமது செயலை நிறுத்திக்கொண்டால் எதிலுமே நம்மால் வெற்றி காண முடியாது. நமது இலக்கை அடைய தொடர் முயற்சி தேவை. வெற்றியை ஒரு கால வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. அது கிடைக்கும்வரை நாம் போராடியே ஆக வேண்டும். 

நீங்கள் உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழாமல் இருப்பதற்கு இந்த மூன்றும்தான் காரணமாக இருக்கும். எனவே இதைப் புரிந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த பாதையில் பயணிப்பதற்கான முயற்சியில் இன்றே இறங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com