இந்த 5 பண்புகள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் வேற லெவல்!

5 Best Personal Traits for Life.
5 Best Personal Traits for Life.

உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றக்கூடிய தலைசிறந்த 5 பண்புகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த பண்புகளை தெரிந்து கொண்டு நாம் அவ்வாறு நடந்து கொள்வது மூலமாக, வாழ்வில் நல்ல நிலையை நோக்கி நாம் நகர முடியும். குறிப்பாக ஐந்தாவது பண்பு நிச்சயம் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். எனவே இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

  1. எதிலும் தெளிவு வேண்டும்: முதலில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற முயற்சிப்பதற்கு முன்பாக, உண்மையிலேயே உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்ற தெளிவு வேண்டும். வாழ்க்கையில் நமக்கு இருக்கும் தெளிவுதான் அதை சிறப்பாக கொண்டு செல்வதற்கான தைரியத்தை நமக்குக் கொடுக்கும். வாழ்க்கையில் புரிதல் இல்லாதபோது தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்காது. அதற்கு மாறாக தோல்வியால் எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வந்துவிடும். 

  2. ரிஸ்க் எடுத்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும்: நீங்கள் நினைக்கலாம் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால் பிரச்சனைகள் தான் வரும் என்று. ஆனால் நீங்கள் எவ்விதமான ரிஸ்க் எடுக்காமல் இருப்பதாலும் பல பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படத்தான் போகிறது. உண்மையிலேயே தைரியமாக ரிஸ்க் எடுத்தவர்கள் தன் வாழ்க்கையில் நல்ல நிலையையே அடைந்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுப்பதும் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். இதைத் தவிர்ப்பதால் ஆகச் சிறந்த அனுபவங்களை நீங்கள் இழக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  3. வாழ்வில் அனைத்திற்கும் கேள்வி கேளுங்கள்: நீங்கள் கண்ணால் காண்பது காதால் கேட்பது அனைத்தையும் அப்படியே நம்ப வேண்டாம். அனைத்தையும் கேள்வி கேட்கும் மனநிலை மிக முக்கியம். இன்றைய நவீன உலகில் நாம் எதை நம்புவது நம்பாமல் போவது என்பதே தெரியவில்லை. எனவே இணையத்தில் காணொளிகள் பார்க்கிறீர்கள், நான் எழுதி வைத்துள்ளது போன்று ஆர்ட்டிகல்ஸ் படிக்கிறீர்கள் என்றால், அது எந்த அளவுக்கு நமக்கு ஒத்துவரும் என்ற கேள்வி மிக முக்கியம். இத்தகைய மனநிலை உங்களுக்குத் தேவையான சரியான விஷயங்களை தேர்வு செய்ய உதவும். 

  4. இரக்ககுணம் வேண்டும்: காலங்கள் மாற மாற நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்டு வருகிறோம். அந்த காலத்தில் இருந்தது போல அனைவரும் ஒன்றாக சேர்ந்து சில செயல்களை செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை இப்போது இல்லை. தன் வீடு, தன் சொத்து, தன் குடும்பம் என அனைத்தையும் பிரித்து பார்க்கும் மனோபாவம் மக்களுக்கு அதிகரித்துவிட்டது. எனவே பிறரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், இரக்க குணத்துடன் இருப்பது முக்கியமாகும். 

  5. எதிலும் பொறுமை தேவை: இப்போது அனைவருக்குமே எல்லா விஷயங்களிலும் உடனடி மன நிறைவு தேவைப்படுகிறது. எதை செய்தாலும் உடனடியாக அதில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அனைத்தும் சீக்கிரமாக கிடைக்க வேண்டும் என நினைப்பதே பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே அனைத்திலும் பொறுமையாக இருந்து கையாளும் பண்பு மிக மிக முக்கியம். பொறுமையாக உங்களுக்கான செயல்களை நீங்கள் செய்யுங்கள், நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தானாக நடக்கும். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com