இந்த விஷயங்களை செஞ்சா நீங்களும் புத்திசாலி தான்... ட்ரை பண்ணுங்க!

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை பதற்றமில்லாமல் எதிர்கொள்ள புத்திசாலி மனிதர்கள் பின்பற்றும் 5 எளிய மற்றும் ரகசிய பழக்கவழக்கங்கள்.
புத்திசாலி மனிதர்கள் Smart people habits
புத்திசாலி மனிதர்கள் Smart people habits
Updated on

ஒருவர் அதிக மதிப்பெண் எடுத்தாலோ அல்லது அனைத்திற்கும் உடனுக்குடன் பதில் சொன்னாலோ அவரை அறிவாளி என்று பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையான அறிவுத்திறன் என்பது தகவல்களை மனப்பாடம் செய்வதில் இல்லை. சிக்கலான நேரங்களில் ஒரு மனிதன் எப்படி செயல்படுகிறான் என்பதில்தான் அவனது நிஜமான திறன் அடங்கியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை அவர்கள் கையாளும் விதம் மற்றவர்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற புத்திசாலி மனிதர்கள் தங்களின் மூளையை மிகவும் வித்தியாசமான முறையில் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பிறப்பிலேயே இந்தத் திறனைக் கொண்டு வருவதில்லை. சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமே அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் உங்களின் சிந்தனைத் திறனை மாற்றி உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் சில எளிய பழக்கவழக்கங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீண் விவாதங்கள் வேண்டாம்!

தங்கள் கருத்துக்கு மாற்று கருத்து வரும்போது சாதாரண மனிதர்கள் உடனே கோபமடைந்து சண்டையிடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் அறிவாற்றல் மிக்கவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அதற்குப் பதிலாக எதிர்த்தரப்பினர் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்துக் கவனமாகக் கேட்பதன் மூலம் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் நன்மதிப்பை மிக எளிதாகப் பெற்று விடுகிறார்கள்.

புத்திசாலி மனிதர்கள் Smart people habits
புத்திசாலி மனிதர்கள் Smart people habits

பறவைப்பார்வையில் பிரச்சனைகளை அணுகுவது!

சிறு தோல்வி வந்தாலும் பலரும் உலகமே முடிந்துவிட்டதாக நினைத்து முடங்கிப் போவார்கள். ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் அறிஞர்கள் பிரச்சனைகளை ஒரு பெரிய கோணத்தில் பார்ப்பார்கள். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அடுத்த முறை எப்படிச் சிறப்பாகச் செயல்படலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்திப்பார்கள். அவர்கள் பிரச்சனைகளை புதிராகப் பார்த்து அதற்கான தீர்வை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
புத்திசாலி மனிதர்கள் Smart people habits

அமைதியை ஆயுதமாக பயன்படுத்துவது!

பேசும் வார்த்தைகளை விட அமைதிக்கு அதிக சக்தி உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். பலரும் அமைதியைக் கண்டு பயந்து ஏதேனும் பேசி அந்த இடத்தை நிரப்ப நினைப்பார்கள். ஆனால் அறிவாளிகள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் அமைதியைக் கையாண்டு மற்றவர்கள் பேசுவதை முழுமையாகக் கேட்பார்கள். பதிலளிப்பதற்கு முன் 3 வினாடிகள் அமைதியாகச் சிந்தித்துச் செயல்படுவதால் அவர்களின் வார்த்தைகளுக்குச் சமூகத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் எப்போதுமே கிடைக்கிறது.

மாற்றக்கூடியவை மீது மட்டுமே கவனம்!

வானிலை எப்படி இருக்கும் அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது போன்ற நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை நினைத்துக் கவலைப்படுவது முற்றிலும் வீணான செயலாகும். ஏபிஜே அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் தாங்கள் கட்டுப்படுத்தக்கூடிய செயல்களில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தினார்கள். நம்மால் மாற்றக்கூடிய விஷயங்களில் ஆற்றலைச் செலவிடும்போது நமது நேரமும் உழைப்பும் மிச்சமாகி வெற்றி மிக விரைவாக நம்மை வந்தடையும்.

இதையும் படியுங்கள்:
இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களை சமூகத்தில் யாரும் மதிக்க மாட்டார்கள்!
புத்திசாலி மனிதர்கள் Smart people habits

திடீரென ஏற்படும் சவால்களுக்கு உடனடியாகக் கோபப்பட்டு எதிர்வினையாற்றுவது பலவீனத்தின் அடையாளம் ஆகும். அந்த இடத்தில் ஒரு நிமிடம் தாமதித்து ஆழ்ந்து மூச்சு விட்டுச் சிந்தித்துச் செயல்படுவதே சிறந்த முதிர்ச்சியைக் காட்டும். மற்றவர்கள் பதற்றமடையும் நேரத்தில் மிகவும் அமைதியாக இருந்து சரியான முடிவுகளை எடுப்பதே உண்மையான திறமையாகும். இந்தப் பழக்கங்களை ஒரே நாளில் மாற்றுவது கடினம் என்றாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மேலே கூறப்பட்ட விஷயங்களில் ஏதேனும் ஒரு பழக்கத்தைத் தேர்ந்தெடுத்து இந்த வாரம் முழுவதும் அதைப் பின்பற்றி வாருங்கள். உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com