Captain America: 5 வாழ்க்கை பாடங்கள்.. நேர்மை உன்னை உயர்த்தும்! 

Captain America
Captain America

வணக்கம் நண்பர்களே! இன்று இந்த பதிவின் வாயிலாக கேப்டன் அமெரிக்கா என அழைக்கப்படும் ஒரு சிறப்புமிக்க சூப்பர் ஹீரோவிடம் இருந்து, நாம் நமது வாழ்க்கைக்குத் தேவையான எதுபோன்ற படங்களை கற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி சொல்லப் போகிறேன். அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் அவரிடமிருந்து பல மதிப்பு மிக்க விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அவற்றை நாம் நமது வாழ்வில் பின்பற்றும்போது, அவரைப் போலவே நாமும் சிறப்பான உயரத்தை அடையலாம். 

1. அன்பாக இருங்கள்: கேப்டன் அமெரிக்கா எப்போதுமே தான் சந்திக்கும் அனைவரிடமும் அன்பாகவும், மரியாதையுடனும் இருப்பார். தேவைப்படும்போது யார் என்னவென்று பார்க்காமல் உதவி செய்வார். எனவே நாமும் கேப்டன் அமெரிக்காவைப் போல, நமது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வெளி ஆட்கள் யாராக இருந்தாலும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் நமக்குக் கற்பிக்கிறார். 

2. எளிதில் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்: கேப்டன் அமெரிக்கா எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை ஒருபோதும் முடியாது எனக் கைவிட மாட்டார். எவ்வளவு கடினமான விஷயங்களையும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். நாம் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும், அல்லது ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால், அதில் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் முயற்சி வேண்டும். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் கேப்டன் அமெரிக்காவைப் போலவே நீங்களும் அற்புதமான விஷயங்களை சாதிக்க முடியும். 

3. உங்களை நம்புங்கள்: கேப்டன் அமெரிக்காவுக்கு அற்புத சக்திகள் இல்லை என்றாலும், அவர் தனது திறமைகளை முழுமையாக நம்புகிறார். அவரைப் போலவே நாமும் நம் மீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலமாக, பல சவால்களை வென்று நமது கனவுகளை அடைய முடியும். 

4. டீம் ஒர்க் மிக முக்கியம்: ஒரு குழுவாக சேர்ந்து வேலை செய்வதன் ஆற்றலை கேப்டன் அமெரிக்கா நன்கு உணர்ந்தவர். அதனாலேயே அவெஞ்சர்ஸ் குழுவின் தலைவனாக இருந்து, தீமைகளை எதிர்த்துப் போராடி மக்களை பாதுகாப்பதில் திறமையாக செயல்பட்டார். எல்லா விஷயங்களையும் நாம் ஒருவரே தனியாக செய்துவிட முடியாது. பிறருடன் சேர்ந்து செயல்படும்போது, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு, மேலும் பலவற்றை சாதிக்க முடியும் என்பதை அவர் நமக்குக் கற்றுத் தருகிறார். எனவே டீம் ஒர்க்கின் முக்கியத்துவத்தை அறிந்து, அதைப் பயன்படுத்திக்கொள்ள முயலுங்கள்.

இதையும் படியுங்கள்:
சரியான பழுத்த தர்பூசணியை எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 
Captain America

5. சரியான பக்கம் நில்லுங்கள்: சில சரியான விஷயங்களை பிறர் செய்யவில்லை என்றாலும், கேப்டன் அமெரிக்கா அந்த சரியான விஷயங்களை செய்வதன் முக்கியத்துவத்தை நமக்கு கற்பிக்கிறார். எனவே நாம் முடிந்தவரை நேர்மையாகவும், நியாயமாகவும், அநீதியின் பக்கம் செல்லாமலும் இருக்க வேண்டும். இது கடினமானதுதான் என்றாலும், நேர்மையாக இருப்பவர்கள் எப்போதும் தைரியமாக இருக்கலாம் என்பதை கேப்டன் அமெரிக்கா மூலமாக நாம் கற்றுக் கொள்ள முடியும். 

இப்படி பல விஷயங்களை கேப்டன் அமெரிக்காவிடமிருந்து, நமக்கான வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். இத்தகைய கதாபாத்திரங்களை திரையில் ரசித்துவிட்டு மட்டும் சென்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் அவர்களின் சிறந்த பண்புகளைக் கற்றுக்கொண்டு, நாமும் சிறப்பாக இருக்க முயற்சிப்போம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com