எதையும் வேகமாகக் கற்க உதவும் 5 ரகசியங்கள்!

5 Secrets to Learn Anything Fast
5 Secrets to Learn Anything Fast
Published on

எந்த ஒரு புதிய பாடத்தை கற்க முயலும்போதும் அதை எளிதாக கற்றுக்கொள்வது எப்படி என்ற கேள்வி பலரது மனதில் எழும். பள்ளி காலத்தில் இருந்தே பலர் இப்படிதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில பாடங்களை எளிதாகக் கற்றுக்கொள்ள குறிப்புகள் இருந்தாலும், எல்லா பாடத்தையும் எளிதாகக் கற்றுக்கொள்ள இருக்கும் சில வழிகள் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உங்கள் கற்றல் பாணியைக் கண்டறியவும்: ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களைத் தனித்தனி வழிகளில் கற்றுக் கொள்கிறார்கள். சிலர் படிப்பதன் மூலம் நன்றாகக் கற்றுக்கொள்வார்கள். சிலர் கேட்பதன் மூலம் நன்றாகக் கற்றுக்கொள்வார்கள். சிலரால் செயல்பட்டால் மட்டுமே நன்றாக கற்றுக்கொள்ள முடியும். இதில் நீங்கள் எந்த வகை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு படிக்கும் முறையை மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் படிப்பதன் மூலம் நன்றாகக் கற்றுக்கொள்பவர் என்றால் அதிகமாகப் படியுங்கள். 

இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்: நீங்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோள்கள் சிறியதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக இன்று இரண்டு பக்கங்களை படித்து முடிக்க வேண்டும் என குறிக்கோள் நிர்ணயித்தால், அந்த குறிக்கோளை அடைவதற்காக முறையாக திட்டமிடவும். 

சரியான சூழலை உருவாக்குங்கள்: அமைதியான இடத்தில் குறைந்தபட்ச இடையூறுகளுடன் படிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த இசையை மெதுவாகக் கேட்டுக்கொண்டே படிக்கலாம். நீங்கள் படிக்கும் மேசையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். 

தொடர் மதிப்பீடு தேவை: நீங்கள் கற்றுக் கொண்டவற்றை தொடர்ந்து மதிப்பீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள், எதைப் பற்றி மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் சரியாக புரிந்துகொள்ளாத பகுதிகளை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அல்லது உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ கேளுங்கள். 

இதையும் படியுங்கள்:
ஆதிக்க மனப்பான்மை வளர்வது எப்படி? விளக்கும் The Stanford Prison Experiment!
5 Secrets to Learn Anything Fast

சுவாரசியமான முறைகளைப் பின்பற்றவும்: எப்போதும் சாதாரணமாகப் படிக்காமல் படிப்பை சுவாரசியமாக மாற்ற முயற்சி செய்யுங்கள். உதாரணமாக மனப்பாடம் செய்ய வேண்டிய பாடங்களை பாடலாக மாற்றிப் படிக்கலாம். வரைபடங்கள், விளக்கப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் படிக்கலாம். அல்லது நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகவும் படிக்கலாம். 

இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றி எந்த பாடத்தையும் நீங்கள் எளிதாகக் கற்க முடியும். எனவே, இவற்றை முயற்சித்து, உங்களது கற்றல் திறனை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்க முயற்சிக்கவும்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com