இந்த 5 விஷயங்கள் உங்களுக்கும் நடந்திருக்கா? அப்போ வெற்றி உங்களுக்கு மிக அருகில்னு தெரிஞ்சுக்கோங்க!

5 signs that the universe is testing you
5 signs that the universe is testing you
Published on

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் எந்த ஒரு விஷயமும் நாம் நினைத்தபடி நடக்கவே நடக்காது. தொடர்ந்து பல கஷ்டங்கள், தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றோ, நமக்கு ஏதோ கெட்ட நேரம் நடக்கிறது என்றோ நாம் ரொம்பவே தப்பாக நினைத்துக்கொள்கிறோம். 

ஆனால், நிஜத்தில் பிரபஞ்சம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசைக் கொடுப்பதற்கு முன்பாக, அதற்கு நீங்கள் தகுதியானவர் தானா என்பதைச் சரிபார்க்கும் ஒரு மாஸ்டர் பிளான் தான் இந்த சோதனைகள். பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்பது போல, வாழ்க்கையிலும் சில டெஸ்ட்களை நாம் பாஸ் செய்ய வேண்டி இருக்கிறது. 

பிரபஞ்சத்தின் 5 முக்கிய சிக்னல்கள்!

1. திடீரென வரும் எதிர்பாராத தடைகள்: நீங்கள் ஒரு வேலையை ரொம்ப நேர்த்தியாக பிளான் செய்து ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால் சரியாக அது முடியும் நேரத்திலோ அல்லது தொடங்கும் நேரத்திலோ சம்பந்தமே இல்லாமல் ஒரு மிகப்பெரிய தடை வரும். இந்த இடத்தில் நீங்கள் சோர்ந்துபோய் பின்வாங்குகிறீர்களா, தைரியமாக எதிர்த்து நிற்கிறீர்களா என்பதை பிரபஞ்சம் டெஸ்ட் செய்கிறது. அந்த தடையை உடைத்து முன்னேறுபவர்களுக்கு மட்டுமே மாபெரும் வெற்றி காத்திருக்கிறது.

2. நெருக்கமானவர்கள் உங்களை விட்டு விலகுவது: உங்களுக்கு ரொம்பவே நம்பிக்கையாக இருந்த நண்பர்களோ அல்லது உறவினர்களோ திடீரென எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களிடம் பேசாமல் விலகிச் செல்வார்கள். உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவர்கள் தடையாக இருப்பார்கள் என்பதாலேயே, பிரபஞ்சம் அவர்களை உங்கள் வாழ்க்கையை விட்டு அமைதியாக அப்புறப்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

3. பழைய பிரச்சனைகள் மீண்டும் வரும்: நீங்கள் ஏற்கனவே ஒரு கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்து அதிலிருந்து வெளியே வந்திருப்பீர்கள். ஆனால், அதே போன்ற ஒரு பிரச்சனை வேறு ஒரு ரூபத்தில் மீண்டும் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும். நீங்கள் பழைய தவறுகளில் இருந்து சரியான பாடத்தைக் கற்றுக்கொண்டு விட்டீர்களா என்பதைப் பரிசோதிக்கவே இந்த ரீ-டெஸ்ட் நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
Budget 2026: தங்கம் வாங்கும் முன் இதைப் பாருங்க.! எல்லாமே மாறப்போகுது.!
5 signs that the universe is testing you

4. எல்லாமே முடிந்துவிட்டதாகத் தோன்றும்: வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நம்மிடம் இருந்த பணம், வேலை, நிம்மதி என எல்லாமே பறிபோனது போல ஒரு மாபெரும் வெறுமை தோன்றும். இது உங்களை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் தண்டனை கிடையாது. ஒரு பழைய கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டால் தான், அந்த இடத்தில் ஒரு புதிய பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட முடியும். இது ஒரு புதிய ஆரம்பத்திற்கான சிறந்த அறிகுறியாகும்.

5. உள்ளுணர்வு கொடுக்கும் அதீத தைரியம்: சுற்றிலும் எக்கச்சக்கமான நெகட்டிவ் விஷயங்கள் நடந்தாலும், உங்களின் உள்மனதில் ஏதோ ஒரு மூலையில் எல்லாமே சரியாகிவிடும், தொடர்ந்து முயற்சி செய் என்ற ஒரு குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும். லாஜிக்காகப் பார்த்தால் அங்கே எந்த ஒரு நம்பிக்கையும் இருக்காது, ஆனால் உங்களின் அந்த உள்ளுணர்வு மட்டும் உங்களை முன்னோக்கித் தள்ளும். இதுதான் பிரபஞ்சம் உங்களுடன் நேரடியாகப் பேசும் விதம்.

இதையும் படியுங்கள்:
பிரபஞ்சம் பற்றிய 10 சுவாரஸ்ய உண்மைகள்!
5 signs that the universe is testing you

பிரபஞ்சம் எப்போதுமே ஒருவருக்கு அவர் கேட்கும் விஷயங்களை உடனே சுலபமாக கொடுத்துவிடாது. தங்கம் நெருப்பில் காய்ந்து வந்தால் தான் ஜொலிக்கும் என்பது போல, இது போன்ற கடினமான சோதனைகளைத் தாண்டி வரும்போதுதான் உங்களின் உண்மையான பலம் உங்களுக்கே தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com